Sun Tv Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் கிட்டத்தட்ட 18 ஆக இருந்தாலும், எப்போதுமே மாலையில் வரும் சீரியல் மட்டுமே டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெறும். ஆனாலும் காலை 10:00 மணி முதல் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்றால் அடுத்தடுத்து புது சீரியல்களை இறக்கி கொண்டே வருவார்கள். அப்படித்தான் தற்போது சன் டிவியில் முக்கியமான ஒரு சீரியல் முடிவுக்கு கொண்டு வரப் போகிறார்கள். அதாவது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் மலர் என்ற சீரியல் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
இந்த சீரியலில் முதலில் கதாநாயகியாக கீர்த்தி சர்மா நடித்தார். அதன் பின் இவருக்கு பதிலாக அஸ்வதி என்ற கதாநாயகி கமிட் ஆகி நடித்த வருகிறார். தற்போது இந்த சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட 550 எபிசோடுகளை தாண்டிய நிலையில் கிளைமாக்ஸ் காட்சி நெருங்கப் போகிறது. காரணம் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
அந்த வகையில் இந்த சீரியல் முடிந்ததும் இதற்கு பதிலாக பூங்கொடி என்ற சீரியல் ஆரம்பமாக போகிறது. இதில் கதாநாயகியாக கமிட் ஆகி இருக்கும் நடிகை யார் என்றால் “பூவா தலையா” என்ற சீரியலில் இளமதி என்ற கேரக்டரில் நடித்து வந்த ஸ்வேதா நடிக்கிறார்.
அத்துடன் இதில் பாண்டி கேரக்டரில் நடித்த கதாநாயகன் தான் பூங்கொடியில் ஹீரோவாக என்டரி கொடுக்கப் போகிறார். ஆக மொத்தத்தில் பூவா தலையா சீரியலில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இரண்டு பேருக்கும் முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த சீரியல் மதியம் செவ்வந்தி அல்லது ஆனந்த ராகம் சீரியலுக்கு பதிலாக வரப்போகிறது. இதனை தொடர்ந்து ஆடுகளம் என்ற சீரியலும் புதுசாக வரப்போகிறது. ஆனால் இந்த சீரியல் பிரேம் டைமிங்கில் ஒளிபரப்பாக வேண்டும் என்பதற்காக அப்படியே நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஆடுகளம் சீரியலை கொண்டு வந்து விடுவார்கள்.