வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

4 வருடங்களாக ஒளிபரப்பாகும் சீரியலை ஊத்தி மூடும் சன் டிவி.. 1200 எபிசோடை தாண்டிய ஃபேவரட் நாடகம்

சன் டிவி சீரியல்கள் என்றாலே சின்னத்திரை ரசிகர்களிடம் தனி மவுசு. சினிமா ரேஞ்சுக்கு இருக்கும் சன் டிவி சீரியல்கள் அனைத்தும் வழக்கமாகவே டிஆர்பியை மாஸ் காட்டும். அதிலும் டாப் 3 இடத்தை பிடிக்கும் சன் டிவியின் சீரியல் ஒன்று தற்போது நிறைவு பெறுகிறது என்பதை அறிந்ததும் சின்னத்திரை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அர்ஜுன் சார் என கணவரை செல்லமாக அழைப்பதன் மூலம் ஃபேமஸ் ஆன ரோஜா மற்றும் அர்ஜுன் இருவரையும் ரசிப்பதற்கு என்றே சின்னத்திரை ரசிகர்கள் சன் டிவியின் ரோஜா சீரியலை தவறாமல் பார்க்கின்றனர்.

Also Read: போலீசுக்கு டிமிக்கி கொடுக்க நினைத்த அர்ணவ்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கும்மாங்குத்து

2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1270 எபிசோடுகளை கடந்த ரோஜா சீரியலின் கிளைமாக்ஸ் இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக போகிறது. ஏற்கனவே இந்த சீரியலின் கதாநாயகன் சிபு சூரியன், சினிமா வாய்ப்புக்காக சீரியலில் விட்டு விலகப் போகிறார் என்ற தகவல் வெளியானது.

ஆனால் அதன்பிறகு ரசிகர்களின் ஆதரவு காரணமாக அவர் அந்த முடிவை கைவிட்டார். இது போன்ற சூழல்தான் ஜீ தமிழின் டாப் சீரியலாக இருந்த செம்பருத்தி சீரியலுக்கு வந்தது. அந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் விலகிய பிறகு செம்பருத்தி சீரியல் பெரும் பின்னடைவை சந்தித்தது. அந்த நிலைமை ரோஜா சீரியலுக்கு வந்துவிடாமல் சீரியலின் இயக்குனர், ரசிகர்களை வைத்து சாதுரியமாக காய் நகர்த்தினார்.

Also Read: டிஆர்பி-யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள்.. அதிரடி திருப்பத்தை ஏற்படுத்திய விஜய் டிவியின் சங்கமம்

மேலும் 4 வருடமாக இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகி மட்டுமல்லாமல் வில்லியான அனு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், பல சூழ்நிலையில் உடைய இருந்த இந்த டீம் இவ்வளவு நாள் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம்.

ஆகையால் இதில் நடிக்கும் அனைவரும் இனி அடுத்த லெவலுக்கு செல்ல விரும்புவதால், ரோஜா சீரியலை முடித்துவிட பார்க்கின்றனர். இந்த செய்தி சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Also Read: 27 வயதில் மகன், 23 வயது இளம் பெண்ணுடன் திருமணம்.. ஷாக் கொடுத்த வாணி ராணி புகழ் பப்லு

Trending News