Vijay TV: விஜய் டிவி டிஆர்பிக்காக பயங்கரமான திட்டங்கள் எல்லாம் போடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதைத் தாண்டி மற்ற சேனலில் இருக்கும் முக்கியமான ஆர்டிஸ்ட்களை தட்டி தூக்குவதிலும் பலே கில்லாடிகளாக இருக்கிறார்கள்.
அதிலும் சன் டிவி சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்றால் அல்வா போல் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள்.
விஜய் டிவியை பொறுத்த வரைக்கும் கடந்த சில வருடங்களாக சன் டிவி சீரியல்களிடம் போட்டி போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
அதிலும் எதிர்நீச்சல் சீரியல் வந்த பிறகு விஜய் டிவியின் நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது.
ஆதிகுணசேகரன் வீட்டு மருமகளை வளைத்து போட்ட விஜய் டிவி!
அந்த சமயத்தில்தான் எப்படியாவது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்துக் கொண்டிருந்த மாரிமுத்துவை தங்கள் சேனல் பக்கம் இருக்க முயற்சி செய்தார்கள்.
அதை தொடர்ந்து வில்லி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த ஜான்சி ராணியையும் வலை போட்டு பிடிக்க பார்த்தார்கள். எதுவுமே அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் ஆதிகுனசேகரன் வீட்டு மருமகள் ஒருவரை தங்கள் சீரியலுக்காக இடம் மாற்றி இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் அய்யனார் துணை சீரியலின் அப்டேட் நேற்று வெளியானது.
அந்த அப்டேட்டில் அந்த டிவி சேனலில், அந்த சோவில் நடித்த நடிகை இப்போ நம்ம சேனல்ல என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.
மேலும் அந்த நடிகை யார் என்றும் யூகித்து சொல்ல சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலானோர் அது எதிர்நீச்சல் சீரியலில் முன்னால் நடித்த கொண்டிருந்த ஜனனி தான் என பதிலளித்து இருக்கிறார்கள்.
இவர் எதிர்நீச்சல் 2 சீரியலில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.