புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாரம் 7 நாட்களும் சீரியலை உருட்ட போகும் சன் டிவி.. கெத்து காட்டவுள்ள டிஆர்பி ரேட்டிங்

Sun TV: பொதுவாக தொலைக்காட்சிகளில் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் அந்த தொலைக்காட்சியில் தொடர்கள் எவ்வாறு ரசிகர்களிடம் கொண்டு சேர்ந்துள்ளது என்பதை கணிக்க முடியும். அதிலும் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் தான் இந்த ரேஸில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே சீரியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் ரசிகர்கள் சின்னத்திரை தொடர்களுக்கு கொடுக்கும் வரவேற்பை பார்த்து எல்லாம் தொலைக்காட்சிகளிலுமே ஆறு நாட்களுக்கு அதாவது சனிக்கிழமை சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

Also Read : சாக்லேட் பாய் ஹீரோவால் வந்த அந்தரங்க தொல்லை.. வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய சன் டிவி நடிகை

அதுவும் விஜய் டிவியில் முன்பெல்லாம் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பி வந்தார்கள். ஆனால் அவர்களும் இப்போது சீரியலை தான் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சன் டிவியில் 7 நாட்களும் ஒரே சீரியலை உருட்ட முடிவு செய்து இருக்கிறார்கள்.

சன் டிவியின் டிஆர்பி இப்போது முதல் இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணம் எதிர்நீச்சல் தொடர் தான். அதிலும் ஆதி குணசேகரன் ஆக நடித்த வரும் மாரிமுத்துகாகவே இந்த தொடரை பார்ப்பவர்கள் ஏராளம். அதோடு மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் இந்த தொடரின் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.

Also Read : டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை மொத்தமாக பின்னுக்கு தள்ளிய சன் டிவி

மேலும் யாரும் கணிக்க முடியாத அளவுக்கு திரை கதையை இயக்குனர் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வாரம் 7 நாட்களும் எதிர்நீச்சல் தொடரை ஒளிபரப்ப சன் டிவி முடிவெடுத்து இருக்கிறது. ஏனென்றால் ஞாயிற்று கிழமை தான் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகும்.

அதன்மூலம் சற்று டிஆர்பியை தக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கும் முடிவு கட்ட வேண்டும் என எதிர்நீச்சல் தொடரை இறக்குகிறது சன் டிவி. ஆகையால் இனி எதிர்நீச்சல் ரசிகர்கள் வாரம் முழுக்க இத்தொடரை பார்க்கலாம். ஆனால் சில ரசிகர்கள் ஞாயிற்றுக்கிழமையாவது இந்த தொடருக்கு லீவ் கொடுக்கலாம், அதில் வேலை பார்க்கும் நபர்கள் பாவம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : டிஆர்பியில் முந்த ‘எதிர்நீச்சல்’ குணசேகரனுக்கு விஜய் டிவி விரித்த வலை.. எந்த சீரியலுக்கு தெரியுமா?

Trending News