வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி.. விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டும் விஜய் டிவி

ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களில் இடையேதான் பெரும் போட்டி நிலவும். அதேபோன்றுதான் இந்த வாரமும் சன் டிவி சீரியல் டிஆர்பி-யில் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்து, விஜய்டிவியின் சீரியல்களை மீண்டும் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் வழக்கம்போல் சன் டிவியின் கயல் சீரியல் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 2-வது இடம் அண்ணன் தங்கையின் பாசத்தை காலாகாலமாக காட்டிக் கொண்டிருந்தாலும், அதை விரும்பும் ரசிகர்களிடம் வானத்தைப்போல சீரியலுக்கு தனி இடம் உண்டு என்பதால், 2-வது இடம் கிடைத்திருக்கிறது.

Also Read: புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி.. சன் டிவியை ஒழித்து கட்ட பக்கா பிளான்

3-வது இடம், இரண்டு தாரம் இந்த காலத்தில் எவ்வளவு பெரிய சிக்கல் என்பதை காண்பிக்கும் சுந்தரி சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. 4-வது இடம் அப்பாவிடம் கிடைக்காத பாசத்தை கணவரிடம் அனுபவிக்கும் மகளின் கதையான கண்ணான கண்ணே சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.

5-வது இடம் அதிரடி காதல் கதைக்களத்தை கொண்ட ரோஜா சீரியல் பெற்றிருக்கிறது. 6-வது இடம் தான் பல போராட்டங்களுக்கு இடையே பாரதிகண்ணம்மா சீரியல் பெற்றிருக்கிறது. பொதுவாக விஜய் டிவி சீரியல்களில் பாக்கியலட்சுமி தான் பொதுவாக டாப் 5 இடத்தில் இருக்கும்.

Also Read: 2 படங்களோடு காணாமல் போன சன்டிவியின் செல்லப்பிள்ளை.. வேறு கோணத்தில் வடிவேலுவை காட்டிய இயக்குனர்

ஆனால்  இந்த வாரம் பாரதிகண்ணம்மா சீரியலில் தீவிரவாதிகளை வைத்து மிரட்டியதால், கதையில் சுவாரசியம் ஏற்பட்டு டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பிடித்திருக்கிறது. 7-வது இடம் பெண்களை இந்த காலத்திலும் எப்படி எல்லாம் நடத்துகிறார்கள். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை கண்பிக்கும் சன் டிவியின் எதிர்நீச்சல் இருக்கும் கிடைத்திருக்கிறது.

8-வது இடம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. 9-வது இடம் ராஜா ராணி 2 சீரியலுக்கும், 10-வது இடத்தை 4 அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெற்றுள்ளது.

Also Read: நாம நெனச்சபடி விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்தர்.. புளித்து விட்டதா காதல் மனைவி?

Trending News