புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டிஆர்பி-யில் பிச்சுகிட்டு போன சீரியலை ஊத்தி மூடும் சன் டிவி.. இப்படி ஒரு காரணமா என்ன கொடுமை சார் இது?

Sun Tv Serial: பல ஹிட் சீரியல்களுக்கு பிறகு, சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எதுவுமே மக்களிடம் வரவேற்பை பெறாமல் பல வருடங்களாக அப்படியே இருந்தது. இந்த நேரத்தில் தான் விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் அதிக வரவேற்பை பெற்று அந்த சேனல்களின் டிஆர்பியும் உச்சத்திற்கு சென்றது.

இந்த நிலையில் மூழ்கி கிடந்த சன் டிவி தொலைக்காட்சியை தூக்கிவிடும் அளவிற்கு ஒரு சில சீரியல்கள் கடந்த இரண்டு வருடங்களில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீப காலமாக விஜய் டிவியின் சீரியல்களுக்கு போட்டா போட்டியாக டிஆர்பி யில் களம் இறங்கி சொல்லி அடித்துக் கொண்டிருக்கிறது சன் டிவி சீரியல்கள்.

Also Read:அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர், மரண பயத்தை காட்டிய நபர்.. நடுரோட்டில் சம்பவம் செய்த ஈரமான ரோஜாவே நடிகை

இந்த நேரத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து கடந்த வாரம் வரை டிஆர்பி யில் முதல் ஐந்து இடத்தை பிடித்துக் கொண்டிருந்த சீரியல் ஒன்றை விரைவில் முடிக்க இருக்கிறது சன் டிவி. இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. பலரும் நன்றாக போய்க் கொண்டிருக்கும் சீரியலை ஏன் திடீரென நிறுத்துகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.

டிக் டாக் வீடியோக்களின் மூலம் பிரபலமான கேப்ரியல்லா என்பவரை வைத்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட சீரியல் தான் சுந்தரி. ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் சந்திக்கும் பல பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த சீரியலின் கதை எடுக்கப்பட்டது. இந்த சீரியலில் ஜிஷ்ணு மேனன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

Also Read:முதலைக் கண்ணீர் வடித்து ஏமாற்றும் மகா நடிகன்.. குணசேகரன் பொண்டாட்டியை பொண்ணு கேட்டு போன வில்லன்

சுந்தரியை விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் ஹீரோ, அணு என்னும் பெண் தன்னை காதலிப்பதை தெரிந்து கொண்டு அவளையும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார். இந்த விஷயம் சுந்தரிக்கு மட்டுமே தெரிந்த நிலையில், தற்போது அணுவுக்கும் தெரிந்து அதன் பின்னர் நடக்கும் சில காட்சிகளுடன் சீரியல் முடிக்கப்படத் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலை இப்படி திடீரென நிறுத்துவதற்கு காரணமாக சொல்லப்படுவது சன் டிவியின் புதிய சீரியல் தான். மெட்டிஒலி, நாதஸ்வரம் போன்ற மெகா ஹிட் சீரியல்களை கொடுத்த திருமுருகன், செல்வம் என்னும் சீரியலின் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். இதற்காகத்தான் சுந்தரி சீரியல் நிறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

Also Read:பாக்கியலட்சுமி கதையை கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. நந்தினிக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட்

Trending News