வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியானது. காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வெளிவந்த அந்த திரைப்படம் பேமிலி ஆடியன்ஸை பெருமளவில் கவர்ந்தது. அதனாலேயே இப்படத்திற்கான வசூலும் எதிர்பார்த்ததற்கும் மேலாக இருக்கிறது.
ஆரம்பத்தில் படம் குறித்து சில நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும் தற்போது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருப்பதால் படக் குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இப்படி வசூல் சாதனை புரிந்திருக்கும் இந்த படத்தை வைத்து சன் டிவி மெகா பிளான் ஒன்றை போட்டுள்ளது.
அதாவது தொடர்ந்து விஜய் திரைப்படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வரும் சன் டிவி வாரிசு திரைப்படத்தையும் கைப்பற்றி இருக்கிறது. மேலும் 65 ரூபாய் கொடுத்து இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ள சன் நிறுவனம் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தற்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் இன்னும் சில நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
அந்த வகையில் இப்படத்தை பெரும் தொகைக்கு வாங்கி இருக்கும் அமேசான் ப்ரைம் நிறுவனம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி இப்படத்தை வெளியிட இருக்கிறது. அதை தொடர்ந்து சன் டிவியும் வரும் தமிழ் புத்தாண்டுக்கு இப்படத்தை சேனலில் ஒளிபரப்ப காத்துக் கொண்டிருக்கிறதாம். இது விநியோகஸ்தர்கள் உட்பட ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.
Also read: மும்பையில் மொத்த வித்தையையும் காட்டும் அட்லீ.. 400, 500 கோடி எல்லாம் மேட்டரே கிடையாது
மேலும் இவ்வளவு விரைவில் படத்தை டிவியில் போடுகிறார்களே என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது இப்படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே சன் டிவி இதை பெரும் விலைக்கு வாங்கி இருக்கிறது. அந்த தைரியத்தில் தான் இப்படத்தை டிவியில் வெளியிடவும் சன் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
இதன் மூலம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க சன் டிவி திட்டமிட்டுள்ளது. அதாவது தமிழ் புத்தாண்டு தினத்தன்று வாரிசு திரைப்படத்தை திரையிட்டால் டிஆர்பியும் எகிறும் லாபமும் பல மடங்கு உயரும் என்ற காரணம்தான். அந்த வகையில் இப்படத்தை தியேட்டர் மற்றும் ஓ டி டி தளத்தில் பார்க்க முடியாத ரசிகர்கள் இன்னும் சில மாதங்களில் டிவியில் பார்க்கலாம்.
Also read: தளபதி-67 ரிலீஸ் தேதியை லாக் செய்த லோகேஷ்.. விஜய்க்கு 2023 பிளாக்பஸ்டர் ஹிட் கன்ஃபார்ம்