வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சன் டிவி நாகினிக்கு துபாய் மாப்பிள்ளையுடன் திருமணம்.. வெளியானது வருங்கால கணவரின் புகைப்படம்!

ஹிந்தி சீரியலான நாகினி, தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு அதன் முதல் பாகம் ஆனது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சீரியலில் கதாநாயகி நாகினியாக ஷிவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மௌனி ராய் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானார்.

குறிப்பாக இந்த சீரியலில் காதல் காட்சிக்கும், ரொமான்ஸுக்கும் பஞ்சம் இல்லாததால் இளவட்டத்தின் இஷ்டமான சீரியலாக மாறியது. அதன் பிறகு நாகினி தொடரின் பல பாகங்கள் வெளியிடப்பட்டாலும், மௌனி ராய்க்கு கிடைத்த வரவேற்பு நாகினியாக நடித்த மற்ற நடிகைகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

அதன்பிறகு மௌனி ராய் பாலிவுட்டில் சல்மான்கானுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி, வெள்ளி திரையையும் கலக்கினார். இந்த சூழலில் மௌனி ராய் நீண்ட நாளாக காதலித்த துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியாரை விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுராஜ் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பின் மூலம் தொழிலதிபர் ஆனது குறிப்பிடத்தக்கது. சுராஜ் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான். சுராஜ் மற்றும் மௌனி ராய் திருமணம் வரும் ஜனவரி மாதம் துபாய் அல்லது இத்தாலியில் நடைபெற உள்ளது.

mouni-roy-cinemapettai
mouni-roy-cinemapettai

அதன் பிறகு பீகாரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த தகவலை மௌனி ராயின் உறவினர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக சமூக வலைதளங்களில் மௌனி ராயிடம் அவருடைய ரசிகர்கள் திருமணத்தைப் பற்றி கேட்டதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

ஆகையால் மௌனி ராயின் திருமண தகவலை அறிந்துகொண்ட அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Trending News