வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

80-களில் கொடிகட்டிப் பறந்த 4 நடிகைகள்.. டிஆர்பி-யை ஏற்ற ஒரே சீரியலில் இறக்கிவிடும் சன் டிவி

வெள்ளித்திரை ரசிகர்களைப் போலவே சின்னத்திரை சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதன் காரணமாகவே சமீபத்தில் தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு புத்தம்புது சீரியல்களை தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் விஜய் டிவியில் ‘முத்தழகு’ என்ற புது சீரியல் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து ‘ஈரமான ரோஜாவே2′ என்ற புது சீரியல் விரைவில் துவங்கவுள்ளது. இதில் பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா, சித்தார்த், திரவியம் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

எனவே விஜய் டிவியை போலவே மற்ற சேனல்களிலும் பேரன்பு, வள்ளி திருமணம், ரஜினி உள்ளிட்ட முன்னணி சின்னத்திரை நடிகர் நடிகைகள் நடிக்கும் புது சீரியல்கள் வரிசையாக துவங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு சேனலும் டிஆர்பியை ஏற்றும் விதத்தில் பல்வேறு முயற்சியை மேற்கொள்கிறது.

இதற்கெல்லாம் சன் டிவியும் சளைத்ததில்லை என்பதை காண்பிக்க ராதிகா சரத்குமார், குஷ்பூ, மீனா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஒரே சீரியலே தரையிறக்க சன் டிவி பக்கா ப்ளான் போட்டுள்ளது.

ஏற்கனவே சன் டிவியில் ராதிகா நடித்த’ சித்தி’ சீரியலும், குஷ்பூ நடித்த சீரியலும் மெகா ஹிட் கொடுத்தது. ஆகையால் இதை மனதில் வைத்துக்கொண்டு சன் டிவி ராதிகா குஷ்பு மட்டுமல்லாமல் சின்னத்திரையில் அவ்வபோது கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனாவையும் ஒரே சீரியலில் இணைய உள்ளன.

எனவே இந்தத் தகவலை அறிந்த சின்னத்திரை ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர். அத்துடன் இந்த நான்கு கதாநாயகிகள் கலக்க உள்ள சீரியலை குறித்த தகவலையும் அறிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்துள்ளேன்.

Trending News