திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வலிமை ட்ரைலரில் மாஸ் காட்டிய சன் டிவி சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படம்!

தல ரசிகர்களால் மூன்று வருடம் காத்திருப்பிற்கு பின் நேற்று வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பியது. ஏற்கனவே சென்ற வாரம் வலிமை படத்தின் டீஸர் ரிலீஸ் செய்யப்பட்டு தல ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. இன்னிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லரில் போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக இருக்கும் தல அஜித்துடன் சன் டிவி கயல் சீரியலின் கதாநாயகி சைத்ரா ரெட்டி அருகில் நின்று தல அஜித்துடன் சேர்ந்து மாஸ் காட்டியிருப்பது சின்னத்திரை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் தல அஜித் மற்றும் சைத்ரா ரெட்டி ஒன்றாக சேர்ந்து ட்ரெய்லரில் நின்று மாஸ் காட்டிய புகைப்படமானது தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. அத்துடன் KPY புகழ் வலிமை ட்ரெய்லரில் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் அவருடைய ரசிகர்கள் பெருமளவு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சைத்ரா ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியல் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தற்போது சன் டிவியில் துவங்கப்பட்ட சில மாதத்திலேயே டாப் சீரியல்களில் ஒன்றாக மாறி உள்ள கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

valimai-cinemapettai8
valimai-cinemapettai

இவருக்கு ஜோடியாக ராஜா ராணி சீரியல் பிரபலம் சஞ்சீவ் கதாநாயகனாக சைத்ராவிற்கு ஜோடி சேர்ந்துள்ளார். எனவே கயல்  சீரியலில் சஞ்சீவ்-சைத்ரா இருவரின் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இருப்பினும் சின்னத்திரையிலிருந்து சைத்ரா தற்போது வெள்ளித்திரைக்கு முன்னேறி இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

இவ்வாறு சைத்ரா, புகழ் போன்ற வலிமை படத்தில் நடித்திருக்கும் சின்ன சின்ன கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயான் நிச்சயம் தமிழ் சினிமாவில் வலிமை படத்திற்குப் பிறகு முடியை இருப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஸ்டார் ரஜினியின் காலா படத்திற்கு பிறகு ஹிந்தி நடிகையான ஹீமா குரேஷி, வலிமை படத்தில் தல அஜித்துடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இவ்வாறு வலிமை படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆன அடுத்த நொடி முதல் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இந்தப் படத்தை குறித்த பேச்சு தான். அத்துடன் வரும் பொங்கல்களுக்கு தல அஜித்தின் வலிமை ரிலீஸாக உள்ளதால் ரசிகர்கள் இப்போதிலிருந்தே கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.

Trending News