வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பரபரப்பான திருப்பங்களுடன் 1000 எபிசோடுகளை தாண்டும் சீரியல்.. எத்தனை சேனல் வந்தாலும் அசைக்க முடியாத இடத்தில் சன் டிவி

Sun tv serial become 1000 Episodes: அந்தக் காலத்தில் டிவி என்று சொல்வதை விட எங்க வீட்ல சன் டிவி இருக்கு என்று சொல்லியது தான் அதிகம். அந்த அளவிற்கு சன் டிவி சேனல் மக்கள் மனதில் இடம் பிடித்தது. அதனாலேயே இப்பொழுது வரை யாருமே அசைக்க முடியாத இடத்தில் நம்பர் ஒன் சேனலாக சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. முக்கியமாக சன் டிவிக்கு போட்டியாக எத்தனையோ சேனல்கள் தினுசு தினுசாக சீரியல்களை இறக்கி வருகிறார்கள்.

ஆனாலும் சன் டிவி சேனலை கிட்ட நெருங்க கூட முடியவில்லை. அந்த வகையில் மற்ற சேனல்களை விட சன் டிவில தான் கிட்டத்தட்ட 20 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. காலை, மாலை என்று பிரித்து நாடகத்தை ஒளிபரப்பு செய்கிறார்கள். இதில் காலையில் வரும் நாடகத்தை விட மாலையில் வரும் நாடகத்திற்கு தான் மக்கள் ஏக போக வரவேற்புகளை கொடுத்து வருகிறார்கள்.

ஆனாலும் பகல் நாடகத்தையும் இல்லத்தரசிகள் பார்த்துதான் வருகிறார்கள். அப்படி கடந்த இரண்டு வருடமாக சன் டிவியில் வருகின்ற சீரியல் தான் செவ்வந்தி. இதில் கதையின் நாயகியாக செவ்வந்தி கேரக்டரில் திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவருடைய கல்யாண விவகாரம் சோசியல் மீடியாவில் பூதகரமாக வெடித்தது. அதாவது இவர் சீரியலில் நடிக்கும் பொழுது சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் அர்ணவை காதலித்து மதம் மாறி திருமணம் செய்து கொண்டார்.

Also read: திருமதி செல்வம், தென்றல் சீரியல் சேர்ந்து வரும் லட்சுமி.. களைகட்ட போகும் சன் டிவியின் டிஆர்பி ரேட்

அதன்பின் கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவர் வேறு ஒரு நடிகையுடன் இருப்பதால் பிரச்சனை வெடித்தது. அதனால இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது பெண் குழந்தை பிறந்த பிறகும் குழந்தையே சூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு வந்து நடிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறார். அத்துடன் சீரியலில் இவருக்கு கணவராக ராகவ் நடித்தார்.

ஆனால் சீரியலில் இவருடைய இறப்பை காட்டி தனிமனித பெண்ணாக இருந்து குடும்பத்தை எப்படி போராடி வழிநடத்துகிறார் என்பதை காட்டும் விதமாக கதை நகர்ந்து வருகிறது. எப்படி ரியல் வாழ்க்கையில் திவ்யா ஸ்ரீதர் போராடி வருகிறாரோ, அதே மாதிரியே நாடகத்திலும் இவருடைய வாழ்க்கை கடந்து வருகிறது. மேலும் இந்த நாடகம் 500 எபிசோடு தாண்டும் பொழுது முடிவடைந்து விடும் என்று செய்திகள் வெளிவந்தது.

ஆனால் தற்போது இந்த நாடகத்தின் தரப்பிலிருந்து இப்போதைக்கு இந்த நாடகம் முடிவதாக இல்லை. இனிமேல் பரபரப்பான திருப்பங்களுடன் கதை சுவாரசியமாக நகர இருக்கிறது. அதனால் கிட்டத்தட்ட 1000 எபிசோடு வரை எங்களுடைய நாடகம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Also read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 லிஸ்டில் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றம்.. சன் டிவியை திணறடித்த விஜய் டிவி

Trending News