வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Sun Tv Serial: 1000 எபிசோடு தாண்டி முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்.. டிஆர்பி ரேட்டிங்கில் கொடி கட்டி பறந்த முக்கியமான சீரியல்

Sun TV serial coming to an end: அவ்வப்போது வெளிவரும் படங்களை விட தினமும் பார்க்கக்கூடிய சீரியலுக்குத்தான் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவி தான் முதலிடத்தை பெற்றிருக்கிறது. முக்கியமாக சன் டிவியில் வரும் சீரியல்கள் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை தாண்டி மெகா தொடராக தான் ஒளிபரப்பாகும்.

அந்த அளவிற்கு தொடர்ந்து மக்கள் பேராதரவை கொடுத்து வருகிறார்கள். அதிலும் சில சீரியல்கள் நல்ல இருக்கோ இல்லையோ குடும்ப இல்லத்தரசிகள் வீட்டில் இருக்கும் பொழுது அவர்களுடைய வேலை பழுவை குறைக்கும் அளவிற்கு நாடகத்தை பார்த்தால் தான் பெரிய மன நிம்மதியை அடைந்து கொள்வதாக உணர்கிறார்கள்.

அப்படி சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை தாண்டி தொடர்ந்து பயணித்து வருகிறது. அண்ணன் தங்கையின் பாசத்தை வைத்து குடும்பங்களுக்குள் ஏற்படும் குளறுபடிகளை தீர்க்கும் விதமாக கதை நகர்கிறது.

வரப்போகும் முதல் கனவே சீரியல்

வழக்கம் போல் அண்ணன் தங்கையை தவிர மற்றவர்கள் அனைவரும் நெகட்டிவ் கேரக்டரில் இருந்து அண்ணன் தங்கையின் பாசத்தை பிரிக்கும் அளவிற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள். தற்போது சின்ராசு சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் அனுமதித்த பொழுது பொன்னி ஒரு பக்கம் கோவிலில் நேர்த்திக்கடன் பண்ணி கணவரை காப்பாற்ற போராடுகிறார்.

அதே மாதிரி நான் இருக்கும் வரை என் அண்ணனுக்கு எதுவும் ஆக விடமாட்டேன் என்று துளசி ஒரு பக்கம் போராடுகிறார். இதற்கிடையில் மக்கள் இந்த நாடகத்தில் ஒரே மாதிரியான கதை தான் பல மாதங்களாக இழுத்தடித்து வருகிறது தயவு செய்து முடித்து விடுங்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இருந்தாலும் இப்பொழுது வரை சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

அப்படி டிஆர்பி யில் கொடிகட்டி பறந்து இருந்தாலும் தற்போது புதுப்புது சீரியல்கள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருப்பதால் இந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று சன் டிவி நிறுவனம் முடிவு பண்ணிவிட்டார்கள். அந்த வகையில் கூடிய விரைவில் அனைவரும் திருந்திய நிலையில் ஒன்றாக சேர்ந்து சுபம் போடுவதற்கு கிளைமேக்ஸ் தயாராகி கொண்டு வருகிறது.

மேலும் இந்த நாடகத்திற்கு பதிலாக அடுத்து பிக் பாஸ் கேப்ரில்லா, கண்ணான கண்ணே மற்றும் நந்தினி சீரியல் ஹீரோ ராகுல் ரவி இணைந்து வரும் முதல் கனவே சீரியல் ஒளிபரப்பாக போகிறது. ஏற்கனவே ராகுல் ரவிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதே மாதிரி கேப்ரில்லா விஜய் டிவியில் ஈரமான ரோஜா சீரியலில் காவியா கேரக்டரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து சன் டிவியில் இணைய போகும் சீரியலுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. வானத்தைப்போல சீரியல் மாதிரி இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News