வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

உம்முனா மூஞ்சிய வைத்து 100 எபிசோட் முடித்த பிரபல சேனல்.. வித்தைக்காரங்க சாமியோ!

சன் டிவி சீரியல் என்றாலே சின்னத்திரை ரசிகர்களிடையே தனி மவுசு, ஏனென்றால் இதில் ஒளிபரப்பாகும் ரோஜா, சுந்தரி, மெட்டிஒலி, கண்ணான கண்ணே, வானத்தைப்போல போன்ற சீரியல்களை இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வத்துடன் அனுதினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக கடந்த சில மாதத்திற்கு முன்பே துவங்கப்பட்ட கயல் சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனாலே இந்த சீரியல் டி ஆர் பி-யில் முதலிடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது.

இதில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி இருவரும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி இந்த சீரியலில் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

அத்துடன் இவர்கள் இருவரும் நண்பர்களாக கயல் சீரியலில் பழகிக் கொண்டிருக்கும் நிலையில், கதாநாயகன் கதாநாயகியை ஒரு தலையாக காதலிக்கிறார். இப்படிப்பட்ட கதைக்களத்துடன் நகரும் கயல் சீரியல் தற்போது 100-வது எபிசோடை கடந்திருக்கிறது.

இதற்காக சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்க்கும் ரசிகர்களும் கயல் சீரியல் குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இந்த சீரியலில் சஞ்சீவ் கூடிய விரைவில் சைத்ராவிடம் காதலைத் தெரிவித்து, இருவரும் காதலர்களாக மாறுவதை காண்பிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தரப்பில் கயல் சீரியல் குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

Trending News