வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 6 இடத்தை பிடித்த சன் டிவி சீரியல்.. சிங்கபெண்ணே பின்னுக்கு தள்ளி வந்த புது சீரியல்

Sun Tv Serial TRP Rating: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்து டிஆர்பி ரேட்டிங்கில் சிம்மாசனத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் முதல் ஐந்து இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதற்கு ஏற்ப கெத்தாக இருக்கும் சன் டிவி சீரியல் இந்த வாரம் முதல் ஆறு இடத்தையுமே பிடித்து விட்டது. அந்த வகையில் எந்த சீரியல் எவ்வளவு புள்ளிகளை வாங்கி இருக்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

கயல்: கயல் திருமணத்திற்குப் பிறகு புது டிராக்கை கொண்டு வரும் விதமாக பழைய எதிரிகளை எல்லாம் திருத்தி விட்டு அப்பா மீது வீண் பழி போட்டவர்களை கண்டுபிடித்து அப்பா மீது இருக்கும் கலங்கத்தை துடைக்க வேண்டும் என்று எழிலை கூட்டிட்டு கயல் அவருடைய கிராமத்திற்கு போகிறார். அங்கே புதுசாக முளைத்திருக்கும் எதிரிகளை வைத்து தற்போது கயல் சீரியல் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கும் கயல் இந்த வாரமும் 10.33 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: சதிகார கும்பல் இடம் மாட்டிக்கொண்டு நந்தினி பாவப்பட்ட பெண்ணாக ஒவ்வொரு இம்சையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். கிராமத்தில் சந்தோசமாக பறந்து கொண்டிருந்த நந்தினியை கூண்டில் அடைத்து விட்டது போல் சூர்யா அதிரடியாக தாலி கட்டியதால் சுந்தரவல்லி மொத்த கோபத்தையும் காட்டும் விதமாக நந்தினியை பலியாடாக ஆக்கிவிட்டார். இதையெல்லாம் கண்டிக்கும் விதமாக சூர்யா, நந்தினியை காப்பாற்ற வேண்டும். இந்த வாரம் 9.74 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: இந்த நாடகம் ஆரம்பித்ததிலிருந்து மூன்றாவது இடம் நான்காவது இடம் என மாறிக்கொண்டே வந்தது. ஆனால் இந்த வாரம் புத்தம் புது சீரியலாக வந்திருந்தாலும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் 9.17 புள்ளிகளைப் பெற்று சிங்கபெண்ணே சீரியலை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.

சிங்க பெண்ணே: கடந்த சில மாதங்களாக முன்னுக்கும் பின்னுக்கும் கதை போய்க்கொண்டிருந்தாலும் இந்த வாரத்தில் இருந்து சூடு பிடித்திருக்கிறது என்பதற்கு ஏற்ப ஆனந்திக்கு அழகன் யார் என்கிற உண்மை தெரிந்து விட்டது. அத்துடன் அன்புவை வெளிநாட்டுக்கு போக விடாமல் தடுப்பதற்காக ஆனந்தி முயற்சி எடுத்து வருகிறார். அதனால் எப்படியும் சிங்க பெண்ணே சீரியல் அடுத்த வாரம் முதல் இடத்தை பிடித்து விடும். இந்த வாரம் 9.05 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

சுந்தரி: கார்த்திக்கின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளும் அணு, கார்த்திக்கின் காதல் மீது நம்பிக்கை வந்து மறுபடியும் ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் வெற்றி மற்றும் சுந்தரி கல்யாணத்தில் ஜோடிகளாக கார்த்திக் மற்றும் அனு இணைந்து வரப் போகிறார்கள். அத்துடன் இந்த நாடகத்திற்கு சுபமும் போட்டு விடுவார்கள். தற்போது 8.63 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

ராமாயணம்: சீரியல் என்றாலே கண்ணீர், சோகம், கதறல் என்று குடும்பத்தை சோகமாக கொண்டு போகும் நாடகத்திற்கு மத்தியில் ராமாயணம் கதைக்கும் மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த சீரியல் சன் டிவியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 7.94 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக புத்தம் புது சீரியலாக வந்த ரஞ்சனி சீரியல் 6.33 புள்ளிகளை பற்றி ஏழாவது இடத்திலும், மல்லி சீரியல் 4.53 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்திலும் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல் எல்லாம் சன் டிவியுடன் போட்டி போடவே முடியாது என்பதற்கு ஏற்ப இருக்கும் இடம் தெரியாமலேயே விஜய் டிவி சீரியல் டம்மி பீஸ் ஆகிவிட்டது.

Trending News