Sun Tv, Nelson: சன் டிவி டிஆர்பி இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் இத்தொடரின் எதிர்நீச்சல் தொடர் தான். ஆனாலும் விஜய் டிவியின் டிஆர்பி சாதனையை முறியடிக்க முடியாமல் கிட்டத்தட்ட 16 வருடங்களாக தவித்து வந்தது சன் டிவி. ஆனால் தனது பகையை மனதில் வைத்துக்கொண்டு நெல்சனை வைத்து பக்காவாக பழி தீர்த்துக் கொண்டது சன் டிவி.
அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. மேலும் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் நெல்சன் இதற்கு முன்னதாக கோலமாவு கோகிலா, டாக்டர், பிஸ்ட் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
Also Read : காயப்பட்ட சிங்கத்தின் வெறித்தனமான கர்ஜனை.. நெல்சனை அவமானப்படுத்திய மீடியா, ஜெயிலரால் ஏற்பட்ட மாற்றம்
ஆனால் அவருடைய ஆரம்ப புள்ளி எது என்று பார்த்தால் விஜய் டிவி தான். அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பணியாற்றி வந்தார் நெல்சன். ஜோடி நம்பர் ஒன் முதல் சீசன் நன்றாக போக 2007 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக சிம்புவை அழைக்கலாம் என்ற யோசனையை கொடுத்தது நெல்சன் தானாம்.
அந்த சீசனில் பப்லு பிரிதிவிராஜ் மற்றும் சிம்பு இடையே ஆன சர்ச்சை மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. அதுமட்டுமின்றி அந்த எபிசோடு மட்டும் டிஆர்பியில் 27 ரேட்டிங் பெற்றது. தற்போது வரை அந்த சாதனையை எந்த தொலைக்காட்சியாலும் முறியடிக்க முடியாமல் உள்ளது. இதை அறிந்த சன் டிவி நெல்சனுக்கு கொக்கி போட்டு இருக்கிறது.
Also Read : விஜய்யை மறைமுகமாக டேமேஜ் செய்யும் நெல்சன்.. சகுனியாக அடுத்தடுத்து படங்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி
ஆனால் அப்போது விஜய் டிவியில் இருந்து நெல்சன் வர மறுத்துவிட்டாராம். அதன் பின்பு இயக்குனராக அறிமுகமாகி ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என சூப்பர் ஸ்டாரை வைத்து நெல்சனை வளைத்து போட்டது சன் டிவி. இப்போது ஜெயிலர் மூலம் கலாநிதி நல்ல வருமானம் பார்த்திருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்தது என்று சொன்னாலும், அவரை தன் வசப்படுத்திக் கொண்டு சம்பாதித்து ராஜ தந்திரத்தை கையாண்டு உள்ளார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். அதோடு மட்டுமல்லாமல் ஜெயிலர் ஆடியோ லான்ச் பங்க்ஷன் மூலம் தனது சன் டிவி டிஆர்பியையும் அதிகரித்துக் கொண்டு உள்ளனர்.
Also Read : ஜெயிலரை பார்த்தபின் நெல்சனுக்கு போன் போட்ட விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா.?