Singapenne: பிரபல சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் சிங்க பெண்ணே சீரியல் பெரிய அளவில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இதற்கு காரணம் மகேஷ் எடுத்த முடிவு தான். எப்படியாவது தன்னுடைய காதலை ஆனந்தியிடம் சொல்லி விட வேண்டும் என மகேஷ் துடியாய் துடித்துக் கொண்டிருந்தான்.
அதற்கு ஏற்றது போல் அவனுடைய பிறந்தநாள் விழாவும் வந்தது. பிறந்தநாள் விழாவில் எல்லோரும் முன்னிலையிலும் ஆனந்தியை காதலிப்பதை தெரிவிக்க வேண்டும் என்பது அவனுடைய ஆசை.
பிறந்தநாள் அன்று மகேஷ் மனது கஷ்டப்படக் கூடாது என அன்பு நினைக்கிறான். ஆனால் ஆனந்தி என்றாவது ஒருநாள் மகேஷுக்கு இந்த விஷயம் தெரிய வரும்.
விறுவிறுப்பான கதைக்களம்
அப்போது அவனைப் பெரியதாக ஏமாற்றுவதற்கு இப்போவே சொல்லிவிடலாம் என ஆனந்தி முடிவெடுத்து வருகிறாள்.
இந்த வாரம் வெளியான ப்ரோமோ முழுக்க ஆனந்தி தன்னுடைய காதலை மகேஷிடம் சொல்வது போல் அமைந்திருக்கிறது.
இதனாலேயே இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது தெரிந்தால் மகேஷ் என்ன செய்வான் என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
அதனாலேயே இந்த வார TRP ரேட்டிங்கில் சிங்க பெண்ணே சீரியல் 9.47 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் அதே சேனலில் மூன்று முடிச்சு சீரியல் இருக்கிறது.