புதன்கிழமை, அக்டோபர் 23, 2024

அடுத்த வாரத்திலேயே முக்கியமான சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி.. 1100 எபிசோடுக்கு மேல் ஓடிய சீரியல்

Sun tv Serial: சன் டிவியில் சில சீரியல்கள் கிளைமேக்ஸ் கிட்ட நெருங்கிக் கொண்டே வருகிறது. அதனால் அந்த சீரியல்களை எல்லாம் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட்டு வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் புத்தம் புது சீரியல்களை ஒவ்வொன்றாக இறக்கலாம் என சன் டிவி முடிவு பண்ணி விட்டது. அந்த வகையில் 1100 எபிசோடு தாண்டிய ஒரு சீரியலை அடுத்த வாரத்துக்குள்ளே முடிக்கலாம் என்று இறுதி அத்தியாயத்தின் சூட்டிங் எடுத்து விட்டார்கள்.

அப்படி அடுத்த வாரத்திலேயே முடிக்க போகும் முக்கியமான சீரியல் என்னவென்றால் சுந்தரி சீரியல் தான். டிஆர்பி ரேட்டிங்கில் 5 மற்றும் 6-வது இடத்தை மாத்தி மாத்தி தக்க வைத்துக் கொண்டிருந்த சுந்தரி சீரியல் வெற்றிகரமாக இரண்டாவது பாகத்தையும் கொண்டு வந்து விட்டது. அதாவது 2021 ஆம் ஆண்டு துவங்கிய முதல் சீசன் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஒளிபரப்பானது.

அடுத்து இரண்டு நாள் கேப்பிலேயே இரண்டாவது பாகமாக சுந்தரி கலெக்டராக வந்தார். இவருக்கு ஜோடியாக வெற்றி நடிப்பும் மக்களை கவர்ந்து விட்டது. ஆனாலும் இப்பொழுது வரை கார்த்திக், சுந்தரியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கண்ணு தெரியாது போல வெற்றி மற்றும் சுந்தரியை ஏமாற்றி சுந்தரி வீட்டுக்குள் புகுந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக், சுந்தரி மற்றும் வெற்றிக்கு அடுத்தடுத்து என்ன பிரச்சனைகளை கொடுக்கப் போகிறார் என்று தெரியாமல் புரியாத புதிராக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது இந்த நாடகத்திற்கான கிளைமாக்ஸ் சூட்டிங் எடுத்து விட்டார்கள். கடைசியில் கார்த்திக் திருந்துவது போல் வரலாம் அல்லது அணுவை தேடி நானும் போகிறேன் என்று தவறான முடிவு கூட எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

பிறகு இந்த சீரியலுக்கு அடுத்து தினமும் ஏழு மணிக்கு ஒளிபரப்பாக தயாராகி இருப்பது சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தியின் தோழியாக நடித்த ரெஜினா என்கிற ஜீவிதா நடிப்பில் உருவாகியுள்ள ரஞ்சினி சீரியல் வரப்போகிறது. இந்த நாடகம் முழுக்க முழுக்க நட்பு ரீதியாக இருக்கப் போகிறது.

இதில் இவருக்கு ஜோடியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலில் ஹீரோ ஆதியின் நண்பராக நடித்த கேசவன் கதாநாயகனாக கமிட் ஆகி இருக்கிறார். பிரைம் டைமில் ஒளிபரப்பாக போகும் இந்த நாடகமும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News