Sun Tv Trp Rating: ஒவ்வொரு வாரமும் எந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எவ்வளவு புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் எந்த இடத்தை பிடிக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த முதல் 5 சீரியல்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
மருமகள்: தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று போராட்டம் பண்ணும் பிரபு மனசை மாற்றி ஒற்றுமையாக குடும்பத்துடன் இருக்க வைக்க வேண்டும் என்று போராடும் ஆதிரையின் முயற்சி வெற்றி பெறுமா என்று கேள்விக்குறியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் இவர்களை பிரிக்க வேண்டும் என்று வேல்விழி பல சதிகளை தீட்டி வருகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.16 புள்ளிகளை பற்றி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
சுந்தரி: கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் முடிந்து விட்டது. அந்த வகையில் கிளைமாக்ஸ் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி சுந்தரியுடன் சேர்ந்து விட்டார். அதே மாதிரி அணு கார்த்திக் உடன் சேர்ந்து ஒட்டுமொத்த குடும்பத்துடன் சுபம் போட்டு விட்டார்கள். கிளைமாக்ஸ் என்பதால் அனைவரும் பரபரப்பாக பார்த்த நிலையில் 9.89 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
கயல்: கடந்த சில மாதங்களாக முதலிடத்தில் இருந்த கயல் இந்த வாரம் 10.23 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. எழிலை கூட்டிட்டு கிராமத்திற்கு போன கயலுக்கு வேலு மூலமாக பிரச்சனை ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் எழிலை வைத்து கயலை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார்கள்.
சிங்க பெண்ணே: அன்பு ஆனந்தியின் காதல் ஒன்று சேர்ந்து விட்டது என்பதற்கேற்ப இருவருடைய மனதும் நெருங்கி விட்டது. ஆனால் ஆனந்தி தன்னுடைய வீட்டில் தான் இத்தனை நாளாக இருந்திருக்கிறார் என்று அன்புவின் அம்மாவுக்கு தெரிந்ததால் ஆனந்தியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார். அதே மாதிரி மகளை பார்க்க வந்த ஆனந்தியின் அப்பாவுக்கு தொடர்ந்து அதிர்ச்சி தரும் விஷயங்கள் நடந்து விட்டது. இருந்தாலும் இந்த சூழ்நிலையிலும் அன்பு ஆனந்தியின் காதல் ஒன்றாக பயணித்து வருகிறது. இந்த வாரம் 10.41 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: சூர்யாவின் கேரக்டர் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போகப்போக பண்ணும் விஷயங்கள் அனைத்தும் முகம் சுளிக்க வைக்கிறது. ஏனென்றால் நந்தினி கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டி கூட்டிட்டு வந்தாலும் அடுத்து செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் சுந்தரவல்லியை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக நந்தினியை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார். இதனால் நந்தினியின் மனநிலை என்ன என்பதை புரிந்து கொள்ளாத அளவிற்கு சூர்யாவின் கேரக்டர் மட்டமாக இருக்கிறது. இந்த வாரம் 10.45 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று முதல் ஐந்து இடத்தில் சன் டிவி சீரியல் தான் ஒய்யாரமாக இருக்கிறது.