புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பழசை ஓரம் கட்டி புதுசா 10 சீரியல்களை வெளியிடும் சன் டிவி, விஜய் டிவி.. அடித்து தும்சம் பண்ண போகும் டிஆர்பி

Upcoming New Serials: தாத்தா பாட்டி காலத்தில் இருந்து இப்பொழுது வரை சீரியலுக்கு மக்கள் பேராதரவை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சில சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது நாடகத்தை ஒளிபரப்பு செய்கிறார்கள்.

அதிலும் சன் டிவியை மிஞ்ச முடியாத அளவிற்கு ஏகப்பட்ட சீரியல்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் முதல் ஐந்து இடத்தை பிடித்து டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்தது சன் டிவியில் உள்ள சீரியல்கள் தான். இதையும் தாண்டி தற்போது புது புது நாடகத்தை கொண்டு வருகிறார்கள். அது என்னென்ன நாடகங்கள் என்பதை பார்க்கலாம்.

சன் டிவி: ஈரமான ரோஜா சீரியலில் நடித்த கேப்ரில்லா மற்றும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்த ராகுல் ரவி சேர்ந்து புத்தம் புது நாடகத்தின் மூலம் வரப்போகிறார்கள். அடுத்ததாக “புன்னகை பூவே” நாடகத்தின் மூலம் புத்தம்புது ஆர்டிஸ்ட்கள் அறிமுகமாக போகிறார்கள். இதில் ஹீரோவாக ஹர்ஷ் நாக்பால் நடிக்கிறார்.

ஓவர் டேக் பண்ணிய சன் டிவி

அடுத்ததாக ஜீ தமிழில், நினைத்தாலே இனிக்கும் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் மிதுன் ராஜ் சன் டிவியில் புத்தம் புது சீரியலில் வர இருக்கிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு ஹீரோயின் கமிட்டாகி இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதனை அடுத்து “கலாட்டா கல்யாணம்” என்ற சீரியலில் விக்கி ரோஷன் நடிக்கிறார்.

இவர் ஏற்கனவே பிரியமான தோழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அடுத்ததாக மௌனம் ராகம் சீரியலில் கதாநாயகனாக நடித்த சல்மா, அன்பே வா சீரியலில் கதாநாயகி நடித்த டெல்னா மற்றும் ரோஜா சீரியலில் வில்லியாக நடித்த அக்ஷயா. இவர்கள் கூட்டணியில் புது சீரியல் வரப்போகிறது.

இதனைத் தொடர்ந்து பேரன்பு சீரியலில் கதாநாயகனாக நடித்த விமல் வெங்கடேஷ் நடிப்பில் மல்லி என்ற சீரியல் வரப்போகிறது. இதில் நளினி, பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் மதன் பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அடுத்ததாக “அனாமிகா” சீரியல் என்ற பெயரில் திகில் கலந்த ஒரு சீரியலாக வரப்போகிறது. இதில் ஹீரோவாக சிங்க பெண்ணே சீரியலில் நடித்துவரும் மகேஷ் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் கதிர் கேரக்டரில் நடித்து வரும் ஆகாஷ் நடிக்கப் போகிறார்கள்.

அடுத்து மெட்டி ஒலி சீசன் 2 சீரியல் கூடிய விரைவில் வரப்போகிறது. இதற்கான ஆடிஷன் வேலை மும்மரமாக போய்க்கொண்டிருக்கிறது. அடுத்து விஜய் டிவியில் “பனி விழும் மலர்வனம்” தொடரில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா மற்றும் ஈரமான ரோஜா சீரியல் நடித்த சித்தார்த் நடிக்கப் போகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜா சீரியலில் நடித்த கதாநாயகன் திரவியக்குமார் மற்றும் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்த மல்லிகா வில்லி கேரக்டரிலும் வரப்போற சீரியல் “வீட்டுக்கு வீடு வாசப்படி”. இப்படி போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு சேனல்களும் புத்தம் புது சீரியல்களை இறக்கி டிஆர்பி யை தக்க வைத்துக் கொள்ளப் போகிறார்கள்.

இதனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் பழைய சீரியல்களில் எது வியாபாரம் ஆகாமல் முடங்கிப் போய் கிடக்கிறதோ அதை அதிரடியாக நிறுத்துவதற்கு சேனல்கள் தரப்பில் இருந்து ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இதில் எதிர்நீச்சல், வானத்தைப்போல, அன்பே வா, செவ்வந்தி, சுந்தரி, பாக்கியலட்சுமி, தமிழும் சரஸ்வதியும் போன்ற சீரியல்கள் முடிவுக்கு வரப் போவதாக தகவல் வெளியாயிருக்கிறது.

Trending News