புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இளம் ஹீரோயினை வைத்து புத்தம் புது சீரியலை கொண்டு வரும் சன் டிவி.. கமிட் ஆன விஜய் டிவியின் கதாநாயகன்

Sun tv New Serial: சின்னத்திரை பொருத்தவரை சீரியலுக்கு பஞ்சமே இல்லை என்பதற்கு ஏற்ப பல சேனல்களில் எக்கச்சக்கமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சன் டிவி சீரியல் தான் சூப்பர் என்று மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட்டது. அதனால் சன் டிவிக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைப்பதால் அவ்வப்போது புத்தம் புது சீரியல்களை இறக்கிக் கொண்டே வருகிறார்கள்.

அந்த வகையில் இப்போது கயல், சுந்தரி, மலர், இனியா போன்ற சீரியல்கள் கிளைமாக்ஸ் நோக்கி போய்க் கொண்டிருப்பதால் அடுத்தடுத்து புது சீரியல்கள் வரிசை கொண்டு காத்திருக்கிறது. அப்படித்தான் இப்பொழுது ஒரு புத்தம் புது சீரியல் சூட்டிங் மும்மரமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகிறது.

இதில் இளம் ஹீரோயினை நடிக்க வைப்பதற்கு சன் டிவி முடிவு எடுத்திருக்கிறது. அந்த வகையில் அந்த இளம் ஹீரோயின் யார் என்றால் அயலி வெப் சீரியஸின் மூலம் மிகவும் பிரபலமான அபி நட்சத்திரா. இவர் ஒரு சில படங்களில் தங்கச்சி கேரக்டரில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சின்ன திரையில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் விதமாக கதாநாயகியாக நடிக்க முடிவு எடுத்து விட்டார்.

மேலும் இவருக்கு ஜோடியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் நடிகர் பரத் நடிக்கப் போகிறார். இவர் தான் சின்னத்திரையின் விஜய் சேதுபதி என்று மக்களால் ரசித்துப் பார்க்கப்பட்டு வரக்கூடியவர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க போகும் சீரியலுக்கு உன்னை சரணடைந்தேன் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் கூடிய விரைவில் இந்த சீரியல் சன் டிவியில் வருவதற்கு தயாராகிவிட்டது.

Trending News