ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சுந்தரிக்கு பதிலாக அன்னம் சீரியலை கொண்டு வரும் சன் டிவி.. டிஆர்பி ரேட்டிங்கில் தள்ளாடும் விஜய் டிவி

Sun Tv Serial: சன் டிவியில் உள்ள சீரியல்களை பொருத்தவரை நெடுந்தொடராக பல வருடங்களாக போகும். அப்படித்தான் சுந்தரி சீரியலும் பாகம் 2 வரை கிட்டதட்ட 1300 எபிசோடு மேல் ஒளிபரப்பாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் கிளைமாக்ஸ் காட்சியுடன் சுந்தரி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. இதில் பலரும் எதிர்பார்த்தபடி சுந்தரி மற்றும் வெற்றிக்கு கல்யாணம் நடக்கப் போகிறது.

இந்த கல்யாணத்திற்கு கார்த்திக் அணுவுடன் சேர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து மனம் ஒத்தும் தம்பதிகளாக தொடர்ந்து வாழப்போகிறார்கள். இதனை தொடர்ந்து அதே பிரேமிங் டைமிங்க்கு அன்னம் சீரியல் வரப்போகிறது. இந்த சீரியலும் கிட்டத்தட்ட சுந்தரி சீரியலின் கதை போலவே இருக்கிறது. அதாவது அன்னம் பாசத்துக்காக ஏங்கும் ஒரு பெண்ணாக மாமா குடும்பத்துடன் ஒட்டி உறவாடுகிறது.

ஆனால் மாமாவை தவிர மற்றவர்கள் அன்னத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவமதித்து கஷ்டப்படுவது தான் இந்த நாடகத்தின் முக்கிய கதை. அத்துடன் இதில் மாமா பையனை விரும்பும் அன்னம் அலட்சியப்படுத்தும் முறை மாமன், கோபமாக பேசும் அத்தை இவர்களிடம் இருந்து சிக்கித் தவிக்கும் பாவப்பட்ட பெண்ணாக அண்ணத்தின் கதை இருக்கப் போகிறது.

பெயர் தான் வேற மத்தபடி கதை எல்லாம் ஒன்று என்கிற மாதிரி சுந்தரி சீரியலின் இரண்டாம் பாகம் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இரண்டும் ஒன்று போல தான் இருக்கிறது. இருந்தாலும் சன் டிவியில் எந்த சீரியல் வந்தாலும் அதற்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து பார்க்க தான் செய்வார்கள். அந்த வகையில் சன் டிவியில் அடுத்தடுத்து புது சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டே வருகிறது.

இதனால் விஜய் டிவியின் சீரியல்கள் போரடிக்கிறது என்பதற்கு ஏற்ப அரைச்ச மாவை அரைத்துக் கொண்டு வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பதற்கு தள்ளாடுகிறது. அதற்கு ஏற்ற மாதிரி புதுசாக எந்த கதையும் கொண்டு வராமல் பழைய நாடகத்தை ஓட்டுவதால் பாக்கியலட்சுமி சீரியலை இன்னும் ஒரு சில நாட்களில் முடிக்கும் விதமாக அவசரமாக கிளைமாக்ஸ் கதை உருவாக்கிக் கொண்டு வருகிறது. அதனால் தான் பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த பாக்யாவின் மாமியார் இதில் அன்னத்தின் மாமியாராக இருக்கிறார்.

Trending News