புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தல பிறந்தநாளுக்கு சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் பிரபல நடிகரின் படம்.. ஆனால் அவர் தீவிர விஜய் ரசிகர் ஆச்சே!

தியேட்டர்கள் இல்லாத சமயத்தில் பல புதிய திரைப்படங்கள் OTT தளங்களில் வெளியானதை போல முன்னணி டிவி சேனல்கள் தாங்களாகவே ஒரு படத்தை தயாரித்து பண்டிகை நாட்களில் நேரடியாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது சன் டிவிதான். கடந்த தீபாவளிக்கு நாங்க ரொம்ப பிசி தான் என்ற படத்தை தயாரித்து நேரடியாக டிவியில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பொங்கல் தினத்தன்று புலிகுத்தி பாண்டி என்ற படத்தை நேரடியாக வெளியிட்டது.

இந்த இரண்டு படங்களும் நல்ல டிஆர்பி பெற்றது. குறிப்பாக பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பான சூர்யாவின் சூரரைப்போற்று படத்தைவிட விக்ரம் பிரபு லட்சுமி மேனன் நடித்த புலிகுத்தி பாண்டி திரைப்படம் அதிக டிஆர்பி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்ததாக தல பிறந்த நாளான மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பிரபல காமெடி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை நேரடியாக தயாரித்து வெளியிட உள்ளதாம் சன் டிவி நிறுவனம்.

மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்க உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ஆனந்தராஜ், புஷ்பா புகழ் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி போன்றோரும் நடிக்கின்றனர்.

amritha-aiyer-gvprakash-cinemapettai
amritha-aiyer-gvprakash-cinemapettai

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகவில்லை என்றாலும் அதற்கு முன்னதாக வரும் தமிழ் புத்தாண்டு அன்று வெளி வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Trending News