புதன்கிழமை, ஜனவரி 8, 2025

டிஆர்பி இல்லாததால் இழுத்து மூடப்படும் சன் டிவியின் முக்கியமான சீரியல்.. பூசணிக்காய் உடைத்த இயக்குனர்

Sun Tv Serial is going to end: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு எப்பொழுதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து மக்கள் மனதில் உயரத்தில் இருந்தது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி பின்னடைவை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் விஜய் டிவி மற்றும் மற்ற சேனல்களில் வித்தியாசமான கதைகளத்துடன் மக்களுக்கு பிடித்த மாதிரி காட்சிகள் அமைந்து வருகிறது.

இதனால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எதெல்லாம் பிரேம் டைமங்கில் போட்டும் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை பார்த்து வருகிறதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள். அப்படித்தான் எதிர்நீச்சல் கதையும் முடித்து விட்டார்கள். தற்போது சன் டிவியில் இரவு நேரத்தில் முக்கியமான சீரியலாக மக்கள் தூக்கி கொண்டாடிய சுந்தரி சீரியலும் முடிவுக்கு வர தயாராகி விட்டது.

பூசணிக்காய் உடைக்க தயாரான சுந்தரி சீரியல்

ஏற்கனவே சுந்தரி சீரியல் முதல் பாகம் வெளிவந்து மக்கள் பேராதரவு கொடுத்து வந்தார்கள். அதன்படி இரண்டாம் பாகத்தை கொண்டு வந்து வெற்றி என்ற புது கேரக்டரையும் கொண்டு வந்து மக்களுக்கு பிடித்த மாதிரியான காட்சிகளை அமைத்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை வில்லனாக இருக்கும் முக்கியமான கதாபாத்திரமான கார்த்திக் கொஞ்சம் கூட திருந்தாத நிலையில் அவரை ஜெயிலுக்கு அனுப்பும் விதமாக கிளைமாக்ஸ் காட்சிகள் பரபரப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் சுந்தரி குடும்பம் மற்றும் வெற்றி குடும்பத்தினர் இருவரும் சுந்தரிக்கும் வெற்றிக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள். இதுவரை கார்த்திக் மாஸ்டர் என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ் பாப்பாவும் கார்த்திக்கை வெறுக்கும் அளவிற்கு வெற்றியை அப்பாவாக ஏற்றுக் கொண்டார்.

இதனால் தமிழ் பாப்பாவை கடத்திட்டு போயி தன்னுடன் கூட்டிட்டு போகலாம் என்று நினைத்த கார்த்தியை துரத்தி போய் பிடித்த வெற்றி மற்றும் சுந்தரி இருவரும் சேர்ந்து தமிழ் பாப்பாவை காப்பாற்றி விட்டார்கள். அந்த வகையில் கார்த்திக் ஜெயிலுக்கு போகும் பொழுது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பூசணிக்காய் உடைக்க போகிறார் இயக்குனர்.

அடுத்ததாக சுந்தர் சீரியலுக்கு பதிலாக புத்தம் புது சீரியலாக மூன்று முடிச்சு சீரியல் வரப்போகிறது. இதில் விஜய் டிவி சீரியலில் ஈரமான ரோஜா நாடகத்தில் பிரியா கேரக்டரில் நடித்த சுவாதி ஹீரோயினாக வருகிறார்.

கயல் மற்றும் மல்லி சீரியலின் சுவாரசியமான சம்பவங்கள்

Trending News