சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

டிஆர்பி-யில் கடும் போட்டி போடும் பிரபல சேனல்களின் டாப் 3 சீரியல்கள்.. கண்ணில் விரலை விட்டு ஆட்டும் புது சீரியல்கள்

Sun, Vijay, Zee Tamil and Kalainar channels TRP ratings: வழக்கமாக சின்னத்திரை ரசிகர்களைக் கவர்ந்த டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் தான் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக டிஆர்பி-யில் கடும் போட்டி போடும் சன், விஜய், ஜீ தமிழ், கலைஞர் தொலைக்காட்சி ஆகிய சேனல்களின் டாப் 3 சீரியல்கள் எவை என்பது வெளியாகி இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.

இதில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பொருத்தமட்டிலும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற சீரியல் மூன்றாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ரஞ்சிதமே சீரியல் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 2010ல் ஒளிபரப்பு செய்த நாதஸ்வரம் சீரியல் இப்போது மறுபடியும் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை தயாரித்து எழுதி இயக்கிய திருமுருகன், இதில் ஹீரோவாகவும் நடித்தார். முன்பு சன் டிவியில் ஒளிபரப்பு செய்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற நாதஸ்வரம், இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து டிஆர்பி-யில் முதலிடத்தில் உள்ளது.

Also Read: டாப் 10 படத்தின் டிஆர்பி ரேட்டிங்கை வெளியிட்ட கலைஞர் டிவி.. சிம்மாசனம் போட்டு இருக்கும் சூர்யா

சன், விஜய், ஜீ தமிழ், கலைஞர் சேனல்களில் டிஆர்பி

அதைப்போல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் மூன்று இடங்களை சமீபத்தில் துவங்கப்பட்ட புத்தம்புது சீரியல்கள் தான் பிடித்திருக்கிறது. மூன்றாவது இடம் அண்ணா சீரியலுக்கும், இரண்டாவது இடம் மாரி சீரியலுக்கும், முதலிடம் கார்த்திகை தீபம் சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் மூன்று இடங்களில் மூன்றாவது இடம் ஆஹா கல்யாணம் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. அதைப்போல் இரண்டாவது இடம் பாக்கியலட்சுமிக்கும், முதலிடம் புத்தம் புது சீரியல் ஆன சிறகடிக்க ஆசை சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

மேலும் டிஆர்பி-யில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் சன் டிவி சீரியல்களில் மூன்றாவது இடத்தில் கலெக்டராக மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் உள்ளது. இரண்டாவது இடம் குடும்பத்தின் மொத்த பாரத்தையும் ஒத்த ஆளாக சுமக்கும் கயலுக்கு தான் கிடைத்திருக்கிறது. முதல் இடத்தில் சில்வண்டு போல் இருந்து கொண்டு அவ்வப்போது சிங்கம் போல் கர்ஜிக்கும் ஆனந்தியின் ‘சிங்கப்பெண்ணே’ சீரியல் தான் உள்ளது.

Also Read: 44 வயது சீரியல் நடிகருக்கு அம்மாவான 36 வயது நடிகை.. வசமாக சிக்கிய விஜய் டிவி பிரபலம்

Trending News