புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Aranmanai 4: கோலிவுட்டை தலை நிமிர்த்தினாரா சுந்தர் சி.? அரண்மனை 4 முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Aranmanai 4: சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள அரண்மனை 4 நேற்று வெளியானது. ஏற்கனவே ட்ரைலர், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் என படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

அதிலும் ரிலீசுக்கு முன்பே ஹீரோயின்களின் கிளாமர் போட்டோக்கள் மீடியாவை வலம் வர ஆரம்பித்தது. இதையே ஒரு ஆயுதமாக சுந்தர் சி யும் பயன்படுத்திக் கொண்டார்.

அது மட்டுமின்றி அச்சச்சோ பாடலும் வேற லெவலில் டிரெண்டாக தொடங்கியது. இந்த பாட்டுக்காகவே படத்தை பார்க்கணும் என காத்திருந்த ரசிகர்கள் நேற்று தியேட்டர்களில் குவிய ஆரம்பித்தனர்.

அதன்படி நேற்று விடுமுறை இல்லாத நாளாக இருந்த போதிலும் படத்திற்கு கணிசமான கூட்டம் இருந்தது. முதல் காட்சிக்கு பிறகு வந்த விமர்சனங்களும் இதற்கு ஒரு காரணம்.

அரண்மனை 4 வசூல்

அந்த வகையில் இரவு காட்சி 80 சதவீதத்திற்கு மேல் நிரம்பிய நிலையில் இன்றும் நாளையும் டிக்கெட் முன்பதிவு ஹவுஸ்புல் ஆகிவிட்டது. அதன்படி அரண்மனை 4 முதல் நாளிலேயே 4 கோடி வரை வசூலித்து இருக்கிறது.

கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் பேமிலி ஆடியன்ஸின் வரவும் அதிகம் இருக்கிறது. இதுவே பிளஸ் ஆக அமைந்த நிலையில் இன்று 8 கோடியும் நாளை 10 கோடியும் வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழில் வெளிவந்த படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. அந்த வகையில் சுந்தர் சி அரண்மனை 4 மூலம் கோலிவுட்டை தலை நிமிர்த்தியுள்ளார்.

Trending News