வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சினிமாவில் நிரந்தர இடம் பிடிப்பதற்காக படாத பாடுபடும் நடிகை.. சுந்தர் சி மட்டுமே வாய்ப்பு அளிக்கிறார்

சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன்மூலம் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்கள். இதே முறையை தற்போது பூனம் பாஜ்வாவின் கையாண்டு வருகிறார்.

மாடலிங் மூலம் தன் பயணத்தைத் தொடங்கி 2005இல் மிஸ் பூனே பட்டத்தை வென்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தம்பிக்கோட்டை, எதிரி எண் 3 ஆகிய படங்களில் நடித்தார். பூனம் பாஜ்வாவிற்க்கு அழகும், திறமையும் இருந்தும் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. அதன் பிறகு நாளடைவில் இவர் எடை கூடியதால் கொஞ்சம் கொஞ்சமாக படவாய்ப்புகளும் குறைய தொடங்கியது.

தற்போது சுந்தர் சி மட்டுமே இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். சுந்தர் சி தயாரிப்பில் உருவான முத்துனகத்திரிக்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 படத்தில் பூனம் பாஜ்வா நடித்திருந்தார். கடைசியாக தமிழில் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா படத்தில் மேரி ஆண்டியாக நடித்திருந்தார்.

பூனம் பாஜ்வா, தனது 38 வயதிலும் சினிமாவில் நிரந்தர இடம் பிடிப்பதற்காக கவர்ச்சியான ரோல்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகள் பெறுவதற்காக உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பி உள்ளார். இதனால் தற்போது அண்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் இவருக்கு மீண்டும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வரலாம்.

Trending News