வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பல வருஷத்திற்கு முன்பே இனி சினிமா வேண்டாம் என்ற அஜித்.. சீக்ரெட் உடைக்கும் சுந்தர் சி

இன்றைக்கு தமிழ் சினிமாவுக்கு அடையாளமாக இருக்கும் தல அஜித் பல வருடங்களுக்கு முன்னர் மொத்தமாக சினிமாவை விட்டு வெளியேற முடிவு எடுத்தார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் சுந்தர்சி கூறியது தல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா ராஷி கண்ணா, ஆண்ட்ரியா போன்ற ஒரு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அரண்மனை 3. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை கிடைத்து வருகின்றன.

சுந்தர் சி மற்றும் தல அஜித் கூட்டணியில் 1999ஆம் ஆண்டு உன்னை தேடி என்ற படம் வெளியானது. சுமாரான வெற்றியைப் பெற்ற இந்த படத்தின் போதே தல அஜித் சினிமாவை விட்டு விரைவில் விலக போவதாக சுந்தரிடம் தெரிவித்தாராம்.

தல அஜித்துக்கு கார் ரேஸ் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் நிறைய கார் ரேஸ் பைக் பந்தயங்களில் பங்கு பெற்று நிறைய முறை அவருக்கு ஆபரேஷன் செய்தது நினைவிருக்கலாம். உன்னை தேடி படத்தின் போது அவ்வளவு வலியையும் பொறுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் நடித்துக் கொடுத்தாராம்.

thala-ajith-billa-cinemapettai
thala-ajith-billa-cinemapettai

மேலும் அந்த படம் முடிந்த பிறகு இனி சினிமாவில் நடிப்பது கஷ்டம் தான் எனவும் உடல் அதற்கு ஒத்துக் கொள்ளுமா என்பது தெரியவில்லை எனவும் வருத்தப்பட்டு சினிமா விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார் தல அஜித். ஆனால் அதன்பிறகு தல அஜித்தின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை.

Trending News