திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

3-ம் பாகமே வெளி வரல அதுக்குள்ள நான்காம் பாகமா.? ஒரே ஒரு பங்களாவை வைத்து கோடியில் லாபம்!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் சுந்தர் சி காமெடி கலந்த படங்களில் வெற்றி பெறுவதில் சுந்தர் சி கைதேர்ந்தவர் என்று தான் கூற வேண்டும் இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய சுந்தர்சி சமீபகாலமாக இளம் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு மற்றும் அரண்மனை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன.

அதனால் சுந்தர் சி அடுத்தடுத்து கலகலப்பு மற்றும் அரண்மனை போன்ற படங்களை எடுப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தார். தற்போது கலகலப்பு 2 படம் வெளியாகி ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் அரண்மனையின் 1 மற்றும் 2பாகம் இரண்டும் ரசிகர்களுடன் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

aranmanai-3-cinemapettai
aranmanai-3-cinemapettai

அதனால் தற்போது அரண்மனை 3 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இப்படத்தில் ஆர்யா நடித்துள்ளார் குஷ்பு தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில்.

சுந்தர்சி அரண்மனையின் 4 பாகத்திற்கான கதை அம்சத்தையும் திரைக்கதையும் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரண்மனையின் 3 பாகம் வெளியான பிறகு அரண்மனை 4 பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்குவார் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending News