வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சுந்தர்சிக்கு வாழ்க்கை கொடுத்த படம்.. முதல் வாரத்துக்குப் பின் பட்டையை கிளப்பிய வசூல்

இயக்குனர் சுந்தர் சி யின் படங்கள் என்றாலே அது ஒரு தனி ஸ்டைலில் இருக்கும். படம் முழுக்க ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் காட்சிக்கு காட்சி நகைச்சுவை என அவருடைய படங்கள் எப்போதுமே தமிழ் சினிமாவுக்கு ஒரு கொண்டாட்டம்தான். எத்தனை உச்சநட்சத்திரங்கள் தன்னுடைய படத்தில் நடித்தாலும் அத்தனை பேருக்கும் முக்கியமான ரோலை கொடுப்பதில் சிறந்தவர் இவர்.

அதேபோன்று தன்னுடைய படங்களில் நகைச்சுவைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார் சுந்தர் சி. இவருடைய படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் நிறைந்த மசாலா திரைப்படங்களை மட்டுமே இவர் இயக்குவார்.

Also Read:சுந்தர் சி-க்கு ஆட்டம் காட்டும் இளம் இயக்குனர்.. 6 மடங்கு அதிகமான வசூலால் ஷாக்கான திரையுலகம்

சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே இயக்குனர் சுந்தர் சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் இவர். இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக இருக்கிறார்.

ஆனால் சுந்தர் சி இந்த இடத்திற்கு வருவதற்கு பட்ட கஷ்டங்கள் ரொம்பவே அதிகம். ஒரு வெற்றி படம் கொடுப்பதற்காக பல காலம் கஷ்டப்பட்ட இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது உள்ளத்தை அள்ளித்தா. ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு சுந்தர் சி யாக இருக்கட்டும் அல்லது பட குழுவாக இருக்கட்டும் யாருக்குமே படத்தின் மீதான நம்பிக்கை கிடையாது.

Also Read:ரிலீஸ் அன்றே மண்ணை கவ்விய சுந்தர் சி.. பாசிட்டிவ் ரிப்போட்டால் லவ் டுடேக்கு அடித்த லக்

அதற்கு முக்கிய காரணம் படம் முழுக்க நகைச்சுவை காட்சிகள் மட்டுமே இருக்கிறது, சென்டிமென்ட் என்று எதுவுமே இல்லை. இதை கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் பயங்கர டல் அடித்திருக்கிறது. ஆனால் அந்த ஒரு வாரத்திற்கு பிறகு தியேட்டரில் ரசிகர்களிடையே பயங்கர ரெஸ்பான்ஸ் இருந்திருக்கிறது.

உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் வசூலிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படம் மூலம் தான் சுந்தர் சி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரீட்சையமானார். இன்று ஒரு பேய் படத்தை கூட எப்படி நகைச்சுவையாக சொல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். எந்த நகைச்சுவை காரணமாக உள்ளத்தை அள்ளித்தா படத்தில் பயந்தாரோ அதுவே தற்போது இவருடைய அடையாளமாக இருக்கிறது.

Also Read:சுந்தர் சி-யின் பட வசூலுக்கு ஆப்படித்த இளம் இயக்குனர்.. கவனிக்கப்படாமல் போன காபி வித் காதல்

Trending News