
என்னதான் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும், பெரிய இயக்குனர்களிடம் கொஞ்சம் அனுசரித்து தான் போக வேண்டும். தற்போது அவர் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அங்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார்.
ஏற்கனவே பட பூஜைக்கு 20 பவுன்சர்களுடன் வந்த நயன்தாரா இப்பொழுது படப்பிடிப்பு தளத்திலும் அடிக்கடி நெருக்கடி கொடுத்து வருகிறார். வெளிநாடுகளில் இந்த படத்தின் சூட்டிங் பிளான் பண்ணிய சுந்தர் சிக்கு ஓவர் டார்ச்சர் கொடுத்துள்ளார் நயந்தாரா/.
இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் வெளிநாடு ஷூட்டிங் வர முடியாது என்று கூறிய அவர் இப்பொழுது உள்ளூர் சூட்டிங்கிற்க்கும் ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்து வருகிறாராம். சென்னை சுற்றியுள்ள இடங்களில் மட்டும் தான் ஷூட்டிங் நடத்தப்பட வேண்டுமாம்.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நயன்தாரா வந்து நடித்துவிட்டு போவாராம். அதனால் சுந்தர் சி சென்னையில் உள்ள கோயில்களை மட்டும் தேர்ந்தெடுத்து வருகிறார். அதுவும் போக இந்த ஆடையை உடுத்திக் கொள்ள மாட்டேன், வேறு ஆடை வேண்டும் எனவும் தொடர் தொல்லைகள் கொடுத்து வருகிறாராம் லேடி சூப்பர் ஸ்டார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்காக எல்லாத்தையும் சுந்தர்சி தாங்கிக் கொண்டிருக்கிறார். இல்லையென்றால் அவர் குணத்திற்கு ஹீரோயினையே வேண்டாம் என தூக்கி எரிந்து விடுவார். நயன்தாரா இப்படியே ஓவர் டார்ச்சர் கொடுத்தார் என்றால் மூக்குத்தி அம்மன் என்ற தலைப்பை எடுத்து விட்டு ஹீரோ சப்ஜெக்டாக மாற்றவும் செய்வார்.