ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சுந்தர் சி, லாரன்ஸின் சொத்து மதிப்பு.. 10 படங்கள் வரை எடுக்க நிரம்பி வழியும் கஜானா

Sundar C, Lawrence Net Worth : பேய் படங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் இயக்குனர்கள் சுந்தர் சி மற்றும் லாரன்ஸ் தான். நகைச்சுவை கலந்த பேய் படங்கள் ரசிகர்களுக்கு பிடித்துள்ளதால் தொடர்ந்து இதுபோன்ற படங்களை எடுத்து வருகிறார்கள். சுந்தர் சி மற்றும் லாரன்ஸ் சொத்து மதிப்பை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி ஹீரோவாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் கொடுக்கும் படங்களை இயக்கி வந்த சுந்தர்சிக்கு அரண்மனை படம் கை கொடுத்தது. இந்த படத்தின் ஹிட்டை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் எடுக்க ஆரம்பித்தார்.

மேலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போதும் ஹீரோவாக நடித்து வரும் சுந்தர் சி ஒரு படத்திற்கு மூன்று கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 50 கோடி ஆகும்.

Also Read : ஜிகர்தண்டாவால் அடித்த அதிர்ஷ்டம்.. ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் லிஸ்ட்

சுந்தர் சிக்கு சென்னையில் சொந்தமாக வீடு உள்ள நிலையில் பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்து இருக்கிறார். சுந்தர்சியைப் போல் பேய் படங்கள் மூலம் வெற்றி கண்டவர் தான் லாரன்ஸ். இயக்குனராக தனது திரை வாழ்க்கையை தொடங்கி பன்முகத்தன்மையால் இப்போது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறார்.

ராகவா லாரன்ஸுக்கு முனி படம் திருப்புமுனையாக அமைந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வந்த லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக சந்திரமுகி 2 படம் வெளியாகி இருந்தது. பல படங்களை கைவசம் வைத்திருக்கும் லாரன்ஸ் ஒரு படத்திற்கு 20 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். மேலும் ஆதரவற்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக ஆசிரமம் நடத்தி வருகிறார்.

இதற்கான செலவை இப்போது முழுவதுமாக லாரன்ஸே பார்த்து வருகிறார். தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதி தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு தான் செலவிட்டு வருகிறார். மேலும் சென்னையில் சொந்த வீடு லாரன்ஸுக்கு உள்ள நிலையில் விலை உயர்ந்த நான்கு கார்களை வைத்துள்ளார். தற்போது லாரன்ஸ் இன் சொத்து மதிப்பு 100 கோடி வரை உள்ளதாக கூறப்படுகிறது. பத்து படங்கள் எடுக்கும் அளவுக்கு லாரன்ஸ் மற்றும் சுந்தர் சி யின் சொத்து நரம்பி வலிக்கிறது.

Also Read : திகிலை காட்டிய ரஜினியின் 3 படங்கள்.. தலைவர் நடித்ததை பட்டி டிங்கரிங் செய்து ஸ்கோர் செய்த சுந்தர் சி

Trending News