பல போராட்டங்களுக்குப் பிறகு மதகதராஜா கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பின் தியேட்டரில் ரிலீஸ் ஆகி உள்ளது. எப்பொழுதுமே தனக்கு உண்டான தனித்துவமான பாணியில் படங்களை இயக்கி வரும் சுந்தர் சி இந்த படத்திலும் அட்ராசிட்டி பண்ணியிருக்கிறார்.
விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் என பெரிய நட்சத்திர பட்டாளங்களே இருக்கும் இந்த படம் மொத்த அரங்கத்தையும் சிரிப்பலைகளால் தன்வசப்படுத்தி வருகிறது.ஒரே மாதிரியான டிராக்கில் இன்று வரை சுந்தர் சி சலிப்பு தட்டாமல் பயணித்து வருகிறார். அது மட்டும் இன்றி அவருடன் சேர்ந்து மற்றவர்களையும் கலகலப்பாக கொண்டு செல்கிறார்.
சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து தனியாக காமெடி ட்ராக் பண்றது இல்லை. ஆனால் இந்தப் படம் 8 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதால் சந்தானம் இதில் கலாய் காமெடி பண்ணும் நகைச்சுவை கதாபாத்திரம் செய்திருக்கிறார். சந்தானத்தையும் தாண்டி இறந்த நடிகர் ஒருவர் அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.
மனோபாலா இந்த படத்தில் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துவிட்டார். படத்தைப் பார்த்த அனைவரும் சிரித்து சிரித்து வயிறு வலியோடு தான் சென்று இருப்பார்கள்.படத்தில் இறந்த பிணம் போல் காமெடி ட்ராக் ஒன்று வருகிறது. அது மொத்த அரங்கத்தையும் சிரிக்க வைத்துள்ளது.
பிணம் போல் நடிக்கும் மனோபாலா இதில் பட்டையை கிளப்பிவிட்டார். இப்பொழுது உண்மையில் அவர் இறந்த பின்னரும் இந்த படத்தில் மக்களை ஆனந்த கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளார். படம் இன்னும் நீங்கள் பார்க்கவில்லை என்றால் மன அழுத்தம் குறைய தயவுசெய்து போய் படத்தை பாருங்கள்.