புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Aranamanai 4: சுந்தர் சி இடமிருந்து பிரிக்க முடியாத 2 விஷயங்கள்.. அரண்மனை 4ல் கழட்டி விடப்பட்ட 4 நடிகர்கள்

கமர்சியல் படங்களை இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில் கில்லாடியாக செயல்படுவார் சுந்தர் சி. இவரின் அரண்மனை சீரிஸ் 4 பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது அரண்மனை நான்காம் பாகம் வெளியாகி சக்கபோடு போட்டுக் கொண்டிருக்கிறது,

சுந்தர் சி, இவரிடம் இருந்து சினிமாவில் பிரிக்க முடியாத இரண்டு விஷயங்கள் ஒன்று காமெடி மற்றொன்று கிளாமர். இவரின் படைப்புகளில் இந்த இரண்டும் இல்லாத படங்களை பார்ப்பது மிகவும் கடினம். கைப்புள்ள, நாய் சேகர், வீரபாகு போன்ற காமெடி கதாபாத்திரங்களும் இவரின் படைப்பு தான்.

கிளாமர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுந்தர் சி அரண்மனை நான்காம் பாகத்தில் குடும்பத்தோடு சேர்ந்து வந்து ரசிக்கும்படி அமைத்து விட்டார். இதுவே இந்த படத்துக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. இன்று வரை ஃபேமிலி ஆடியன்ஸ் தான் தியேட்டரில் அதிகமாக வந்து பார்க்கின்றனர்.

எப்பொழுதுமே சுந்தர் சி படங்கள் என்றால் இந்த நான்கு நடிகர்களையும் எல்லா படங்களிலும் பார்க்கலாம். பூனம்பஜ்வா, ராய் லட்சுமி, விச்சு விஸ்வநாத், மனோபாலா இவர்களை சுந்தர் சி விட்டுக் கொடுக்க மாட்டார். அதுவும் அரண்மனை போன்ற பேய் படங்களில் இவர்கள் நிச்சயமாக நடிப்பார்கள்.

இப்பொழுது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அரண்மனை 4ல் பழைய நான்கு நடிகர்களை சேர்க்காமல் புதுவிதமான ஒரு முயற்சியில் கலக்கி விட்டார். வி டிவி கணேஷ், சிங்கம்புலி, நமோ நாராயணன், மொட்ட ராஜேந்தர் என பழைய பாகத்தில் நடிக்காத ஆட்களை போட்டு மாஸ் ஹிட் கொடுத்து விட்டார்.

Trending News