புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Sundar C: ஜெட் வேகம் எடுக்கும் சுந்தர் சி.. அரண்மனை 4 கொடுத்த பூஸ்டால் சந்தானத்துக்கு கொடுத்த டிமிக்கி

சுந்தர் சி யின் அரண்மனை 4 படம் தான் தற்போது தியேட்டர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து சென்டர்களிலும் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகியும் கூட வார இறுதி நாட்களில் டிக்கெட் கிடைப்பதில்லை.

 இந்த படத்தை தனி ஒரு ஆளாக சுந்தரி சி ப்ரொமோஷன் செய்து கொண்டிருக்கிறார். எல்லா யூ ட்யூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். ரிலீஸ் ஆன ஒரு வாரத்திற்குள் இந்த படம் 50 கோடிகளை வசூல் செய்து விட்டது. இதனால் சுந்தர் சி அடுத்தடுத்த படங்களை தயாரிக்க உள்ளார்.

அரண்மனை 4 கொடுத்த பூஸ்டால் சந்தானத்துக்கு கொடுத்த டிமிக்கி

அரண்மனை போல் தனது ட்ரேட் மார்க் படமான கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த மாத இறுதியில் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை ஆரம்பிக்கப் போகிறார். அதற்கான முன் வேலைகளை ஏற்கனவே முடித்துவிட்டார்.

 முதல் பாகம் போல் கலகலப்பு  இரண்டாம் பாகம் எடுபட வில்லை. முதல் பாகத்தில் நடிகர் சந்தானம் இருந்ததால் காமெடி காட்சிகள் தூள் பறந்தது. இப்பொழுது மூன்றாம் பாகத்தில் சிவா மற்றும் விமல் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தானம் இல்லாத  குறையை வேறு ஒரு நடிகரை வைத்து தீர்த்து வருகிறார் சுந்தர் சி.

 அரண்மனை நான்காம் பாகத்தில்  காமெடியில் பின்னிய விடிவி  கணேசை வைத்து தான் கலகலப்பு 3 காமெடியை  திட்டமிட்டு வருகிறார். சமீபகாலமாக கணேஷின் காமெடி நிறைய படங்களில் நன்றாக இருக்கிறது. சந்தானம் இல்லாத குறையை இவர் போக்குவார் என நம்புகிறார் சுந்தர் சி. 

Trending News