இயக்குனர் சுந்தர் சி-யின் பெயர் சொன்னாலே, அவரது காமெடிகள் தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும். இவரது படத்தில் எது இருக்கோ இல்லையோ காமெடி நிச்சயமாக இருக்கும். ஒரு காலத்தில் இவர் மணிவண்ணனுக்கு உதவி இயக்குனராக பனி புரிந்தவர், அந்த காலத்திலிருந்தே, இவருக்கும் நடிகர் சத்யராஜ்-க்கும் நல்ல நட்பு இருந்தது.
முறைமாமன் சுந்தர் சி-யின் முதல் படமாக இருந்தது. இன்றளவும், அந்த படத்தின் காமெடி மக்கள் மனதில் அழியா இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில், முன்பு சத்யராஜ் ஊர்வசி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், இவர் நடிகர் சத்யராஜ் பற்றி பேசியது தற்போது வைரலாகி வர, அது மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
நான் ஈ அடிச்சான் காப்பி தான் அடிப்பேன்..
அந்த நிகழ்வில் பேசிய சுந்தர் சி, ” நானும் சத்யராஜும் ஒரு பிரிவியூ ஷோ- போனோம். செம்ம மொக்க படம்.. எங்களால் பாக்கவே முடியல.. கஷ்டப்பட்டு பாத்து முடிச்சு வெளியில் வந்தால், படத்தின் இயக்குனர் படம் எப்படி இருக்கு என்று கேட்கிறார்.. அப்போது சத்யராஜ் படம் அருமை என்று கூறிவிட்டார்..”
“எனக்கு ஒரே ஆச்சரியம்.. என்ன தலைவா இப்படி சொல்லிட்ட என்று கேட்டபோது, ‘என்ன பண்ணுறது, படம் எடுத்து முடித்து அடுத்த வாரம் ரிலீசுக்கு வைத்திருக்கிறா. அப்போது போய் நல்லா இல்லை என்று சொன்னால், அதையே யோசித்து வருத்தப்படுவார்.
நான் நன்றாக இல்லை என்று சொல்லி படமும் ஓடாமல் போய்விட்டது என்றால், அந்த நாரவாயன் அன்னிக்கே சொன்னான்.. அவன் வாய் வச்ச நேரம் என்று கடைசியில் என்னை தான் வசை பாடுவார்’என்று கூறினார்”
“என்னை பொறுத்தவரையில், நான் சத்யராஜை எனது குருநாதராக ஏற்றுக்கொண்டவன். அவரை நான் அப்படியே ஈ அடிச்சான் காப்பி தான் அடிப்பேன்” என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.