Aranmanai-4: சுந்தர் சி ஒரு மாதம் சுற்றுலாக்கு பின் வேலையை தொடங்கிவிட்டார். அரண்மனை 4 படத்தின் மாபெரும் வெற்றிக்குபிறகு அவருக்கு பாலிவுட், மல்லுவுட், டோலிவுட் என எல்லா பக்கம் இருந்தும் அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. குடும்பத்தோடு விடுமுறையை கழிக்க லண்டன் சென்று விட்டார் சுந்தர் சி.
இப்பொழுது பழைய பார்ட் 2 படங்களை எடுப்பதா, அல்லது பாலிவுட் பக்கம் போய் விடலாமா என்று பெரும் யோசனையில் இருக்கிறார் சுந்தர் சி. அக்ஷய் குமார் அரண்மனை நான்காம் பாகம் ஹிந்தியில் எடுப்பதற்காக இவரை அழைத்து கொண்டு இருக்கிறார்.
பெரிய பெரிய ஹீரோக்களிடமிருந்தும் சுந்தர் சிக்கு அழைப்புகள் வருகிறதாம். இதற்கிடையே மூத்த ஹீரோக்களின் வாரிசுகளுக்காகவும் பல சிபாரிசுகள் வந்து கொண்டே இருக்கிறதாம். ஆனால் சுந்தர் சி மனதில் இருக்கும் எண்ணமே வேறு, பத்து வருடங்களாக காத்துக்கொண்டிருக்கும் அவர் கனவு படத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறார்.
பெரிய ஜாக்பாட்டுக்கு சுந்தர் சி எடுக்கும் அவதாரம்
இதுவரை அரண்மனை 4 மொத்தமாய் 97 கோடிகள் வசூலித்துள்ளது.இந்தப் படம் மூன்று கோடிகள் கம்மியாக வசூலித்து 100 கோடி கிளப்பில் இணைய முடியாமல் போனது. இதற்கெல்லாம் சுந்தர் சி அசரவே இல்லை அவர் கனவு படமான “சங்கமித்ரா” எடுப்பதற்கான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
இந்த படத்திற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஹீரோக்கள் கால் சீட் கொடுக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே இதில் நடிப்பதாக கமிட்டாகி இருந்த ஜெயம் ரவி, ஆர்யா, போன்றவர்கள் நீண்ட நாட்கள் கால் சீட் கொடுக்க தயங்குகிறார்கள். அதனால் இந்த படம் இன்னும் ஒரு நிலைக்கு வரவில்லை. இப்பொழுது அரண்மனை 4 கொடுத்த பூஸ்ட்டால் சுந்தர் சி கனவு ஜாக்பாட் படத்திற்கு ஆரம்ப புள்ளி வைக்கிறார்.
- சுந்தர் சி-யால் மீண்டு வந்த கோலிவுட்
- அடுத்த 100 கோடி வசூலுக்கு தயாரான சுந்தர் சி
- ஐட்டம் நடிகை என்ற பெயரை தவிடு பொடி ஆக்கிய சுந்தர் சி