வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

குஷ்பு இல்லனா அவங்ககிட்ட ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன்.. காதல் ரகசியத்தை போட்டுடைத்த சுந்தர் சி

தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகள் குஷ்பூ – சுந்தர் சி ஜோடி. இவர்களுக்கு திருமணமாகி இருபது வருடங்கள் கடந்த நிலையில் தற்போது சுந்தர் சி அவர்கள் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

குஷ்பூ, சுந்தர் சி எந்த ஹீரோயினை வைத்து வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் ஆனால் சௌந்தர்யாவை வைத்து எடுக்க கூடாது என்று கூறியதாக  பத்திரிக்கையாளர் ஒருவர் சுந்தர் சி யிடம்  கேட்டார்.

அதற்கு பதிலளித்த சுந்தர் சி, சௌந்தர்யா மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகை. அவர் என்னுடைய அருணாச்சலம் படத்தில் பணிபுரிந்தார். மிகவும் அற்புதமாக நடிக்கக் கூடியவர்,  அருமையான மனிதரும் கூட என்று புகழ்ந்துள்ளார்.

குஷ்பு என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் நான் சௌந்தர்யாவிடம் ப்ரொபோஸ் செய்திருப்பேன் என்று ஜாலியாக கூறியுள்ளார். நான் இப்பொழுதும் குஷ்புவிடம், ஒருவேளை நான் சௌந்தர்யாவிடம் ப்ரபோஸ் செய்து அதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்கள் தற்போது உயிருடன் இருந்திருப்பார்கள் என்று அடிக்கடி கூறுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சௌந்தர்யா நடிக்க வரும் பொழுது அவருக்கு துணையாக சௌந்தர்யாவின் அண்ணன் எப்பொழுதும் கூடவே இருப்பார். மிகவும் பாசமான அண்ணன் தங்கை என்றும் சாவிலும் இணைபிரியாமல் இறந்துவிட்டனர் என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் நடிகை சௌந்தர்யாவும், அவரது அண்ணனும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sundar-c-cinemapettai-01
sundar-c-cinemapettai-01

Trending News