Vallan Trailer: சுந்தர் சி யின் இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன் உருவான மதகஜராஜா கடந்த பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.
அதைத்தொடர்ந்து அவர் நடித்துள்ள வல்லான் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. வரும் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் எப்படி இருக்கு என காண்போம்.
சமீபகாலமாக திரில்லர் இன்வெஸ்டிகேஷன் படங்கள் வருவது அதிகமாக இருக்கிறது. அது ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.
வல்லான் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?
அந்த அடிப்படையில் தான் இப்படம் உருவாகி இருக்கிறது. மணி செய்யோன் இயக்கத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து தான்யா ஹோப், அபிராமி வெங்கடாசலம், சாந்தினிஉட்பட பலர் நடித்துள்ளனர்.
ட்ரெய்லரின் ஆரம்பமே திகிலுடன் தான் தொடங்குகிறது. அதை தொடர்ந்து மர்மமான முறையில் நடக்கும் கொலைகளை கண்டறிய முயல்கிறார் சுந்தர் சி.
அதில் கொலைகள் நடக்கும் முறை கொடூரத்தின் உச்சமாக இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு பின்னணி இசையும் கேமரா கோணமும் பரபரப்பாக இருக்கிறது.
விருவிருப்பும் சுவாரசியமும் கலந்து நகரும் இந்த ட்ரெய்லரில் இறுதி வசனம் கவனம் பெற்றுள்ளது. கண்ணை கட்டி ஆடுற கண்ணாமூச்சி ஆட்டத்தை விட மனுஷங்க கண்ணை திறந்து கிட்டே இருக்கும்போது ஆடுற ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என முடிகிறது.
இப்படி ஆக்ஷன் திரில்லராக வெளிவர இருக்கும் இப்படம் நிச்சயம் கவனம் பெறும் என தெரிகிறது. அதே போல் ரசிகர்களும் சுந்தர்.சிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.