வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சுந்தர்சி விட்டுக் கொடுக்காத 4  நடிகர்கள்.. அரண்மனை 4 இல் அலப்பறை பண்ணும் சுந்தர் சி

Sundar C Who Don’t Give Up On  4 Actors in his films: தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான சுந்தர் சி மற்றும் குஷ்பூ இவர்கள் இணைந்து எவர்கிரீன் கதையான ஹாரர் திரைக்கதையை மையமாக வைத்து அரண்மனை படத்தின் நான்கு பாகங்களை இயக்கியுள்ளனர்.

2014 இல் வெளியான அரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார் சுந்தர் சி.

சமீபத்தில் இவர் இயக்கிய அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா,டெல்லி கணேஷ், விச்சு, வி டிவி கணேஷ், சந்தானம்,யோகி பாபு, சந்தோஷ் பிரதாப் என பல நட்சத்திர பட்டாளங்களும் ஒன்றிணைந்து உள்ளனர்.

எப்போதுமே சுந்தர் சி தான் இயக்கிய படங்களில், நடிக்கும் நடிகர்களை குடும்பமாகவே பாவித்து தனது அடுத்தடுத்த படங்களிலும் அவர்களை பயன்படுத்தும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்.

அவர்களில் சிலர் இதோ,

டெல்லி கணேஷ்: ஆரம்ப காலங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் கலக்கிய டெல்லி கணேஷ் தற்போது குறும்படங்கள் மற்றும் வெப் சீரியஸிலும்  நடித்து கவனத்தை ஈர்த்து வருகிறார். 

இவர் தற்போது அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை சரளா: சுந்தர் சி யின் ஃபேவரைட் ஆன கோவை சரளா, அரண்மனை 1,2 கலகலப்பு 2 போன்ற சுந்தர் சி யின் இயக்கத்தில் உருவான படங்களில் தொடர்ந்து காமெடியில் கலக்கி வருகிறார்.

வி டி வி கணேஷ்: கலகலப்பு 2, முத்தின கத்திரிக்காய் போன்ற படத்தில் காமெடியில் கலக்கிய வி டி வி கணேஷ் அரண்மனை 4 திரைப்படத்திலும் சுந்தர் சி யுடன் இணைந்துள்ளார். 

சுந்தர் சி யின் காமெடி படங்களில் எப்போதும் மனோபாலாவுக்கு தனி இடம் உண்டு அந்த இடத்தை தற்போது வி டி வி கணேசுக்கு பகிர்ந்து அளித்து உள்ளார் சுந்தர் சி.

சந்தானம்: கலகலப்பு, அரண்மனை 1 படத்தில் காமெடியில் தெறிக்க விட்ட சந்தானம் அதற்குப்பின் ஹீரோவாக பிசியானதால் 2 மற்றும் 2 பாகங்களில் நடிக்கவில்லை. 

தற்போது சுந்தர் சி யின் வேண்டுகோளுக்கிணங்க அரண்மனை 4 பாகத்தில் கைகோர்த்துள்ளார் சந்தானம்.

அரண்மனை 4 கிளைமாக்ஸ் பாடல் காட்சியில் சிம்ரன்

மற்றொரு மாற்றமாக குஷ்பூ பாராளுமன்ற தேர்தலில் பிசியாக இருப்பதால் கிளைமாக்ஸ் இல் வரும் பாடல் காட்சிக்கு குஷ்புவுக்கு பதில் சிம்ரன் நடனமாடியுள்ளார் என்பதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Trending News