புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சங்கமித்ரா படத்திற்காக விட்டுக் கொடுத்த சுந்தர் சி.. அரண்மனை 4 இல் வைக்கப் போகும் ட்விஸ்ட்

இயக்குனர், நடிகர் என தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை கொண்டவர் தான் இயக்குனர் சுந்தர்சி. ஆரம்பத்தில் படங்களை இயக்கி வந்த சுந்தர் சி 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தில் அவரே நடித்து இயக்கியும் இருந்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் இயக்கும் பல படங்களில் சுந்தர் சி நடித்து வந்தார்.

பொதுவாக சுந்தர்.சியின் படங்களின் கதை உள்ளதோ, இல்லையோ காமெடிக்கும், கவர்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. இவரது படங்களில் நடிக்க வரும் நடிகர்களின் மார்க்கெட் எகுறுமோ, இல்லையோ கட்டாயம் நடிகைகளின் மார்க்கெட் விண்ணைத்தொடும் எனலாம். அந்த ளவிற்கு நடிகைகளுக்கு கதை மற்றும் கவர்ச்சி சுந்தர் சி படங்களில் சற்று அதிகமாகவே இருக்கும்.

Also Read: அடுத்தடுத்து தோல்வி படங்கள்.. லெஜெண்ட் அண்ணாச்சியை வளைத்துப் போட நினைக்கும் சுந்தர்.சி

கமர்சியல் படமாகவே எடுத்து வந்த சுந்தர் சி, அரண்மனை சீரிஸ் போன்ற பேய் படங்களை இயக்க ஆரம்பித்தார். திகிலாகவும், அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும் மையமாக வைத்து சுந்தர்சி அரண்மனை படத்தை 3 பாகங்களாக எடுத்து தற்போது நான்காவது பாகத்தை எடுக்க முற்பட்டுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில், சுந்தர் சி இப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் ஒரு ட்விஸ்ட்டை வைத்துள்ளார். அண்மையில் அரண்மனை 4 படத்தின் பூஜை விமர்சையாக நடந்த நிலையில், சுந்தர் சி அடுத்தபடியாக தனது கனவு படமான சங்கமித்ரா படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

Also Read: அரண்மனை, காஞ்சனாவையே மிஞ்சிய திகில் திரைப்படம்.. 70களில் தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட சஸ்பென்ஸ் திரில்லர்

ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்டோர் நடிக்கவுள்ள இப்படத்தை 2017 ஆண்டிலிருந்து சுந்தர் சி இயக்க திட்டமிட்டு தற்போது இப்படத்தை எடுப்பதற்கான சூழல் சுந்தர்.சிக்கு வந்துள்ளது. இந்நிலையில் அரண்மனை படங்களின் மற்ற 3 பாகத்திலும் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் அரண்மனை 4 படத்தில் சுந்தர்.சி நடிக்கவில்லையாம்.

சங்கமித்ரா படத்தை இயக்குவதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கி ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் செய்ய போகிறாராம். இந்த நிலையில், அரண்மனை4 படத்தில் சுந்தர்.சி நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அரண்மனை படத்தின் 3 பாகங்களில், வினய், சித்தார்த், ஆர்யா உள்ளிட்டோர் ஹீரோக்களாக நடித்த போதிலும் சுந்தர் சி தான் முக்கியமான வேடத்தில் நடித்தார். தற்போது அரண்மனை 4 படம் முழுக்க, முழுக்க விஜய் சேதுபதி நடிக்க உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read: ஜெயம் ரவியின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுந்தர்.சி

Trending News