செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரிலீஸ் அன்றே மண்ணை கவ்விய சுந்தர் சி.. பாசிட்டிவ் ரிப்போட்டால் லவ் டுடேக்கு அடித்த லக்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நேற்று வெளியான லவ் டுடே திரைப்படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி இருக்கிறது. அதனாலேயே இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் நேற்று வெளியான காபி வித் காதல் திரைப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது இந்த திரைப்படம் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் கிளாமர் காட்சிகளால் நிரம்பி இருக்கிறது. அதனாலேயே இந்த திரைப்படத்திற்கு தற்போது ரசிகர்களின் ஆதரவு குறைந்து வருகிறது.

Also read:சுந்தர் சி-யின் பட வசூலுக்கு ஆப்படித்த இளம் இயக்குனர்.. கவனிக்கப்படாமல் போன காபி வித் காதல்

அது மட்டுமல்லாமல் சுந்தர் சி-யிடமிருந்து இப்படி ஒரு கதையை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இதனால் இந்த திரைப்படத்தை விட லவ் டுடே திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும், பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் வசூலிலும் முன்னேற்றம் இருக்கிறது.

இதனாலேயே தற்போது இந்த திரைப்படம் அமெரிக்காவிலும் திரையிடப்பட இருக்கிறது. அந்த வகையில் லவ் டுடே திரைப்படம் அமெரிக்காவில் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இது போன்ற சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு கிடைத்த முன்னேற்றமாகவே இந்த விஷயம் பார்க்கப்பட்டு வருகிறது.

Also read:சுந்தர் சி-யின் கலகலப்பான காமெடியுடன் வெளியான காபி வித் காதல்.. சுடச்சுட வந்தா ட்விட்டர் விமர்சனம்

அது மட்டுமல்லாமல் தற்போது இந்த திரைப்படத்திற்கு வந்து கொண்டிருக்கும் பாசிட்டிவ் விமர்சனங்களால் திரையரங்குகளில் இதற்கான ஸ்கிரீனும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போது காபி வித் காதல் திரைப்படத்திற்காக ஒதுக்கப்பட்ட ஸ்கிரீன்கள் கணிசமாக குறைந்துள்ளது.

இதனால் படகுழு தற்போது கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும் ஓப்பனிங் நாளான நேற்று எதிர்பார்த்த அளவுக்கு வசூலும் வரவில்லை. ரசிகர்களும் அந்த திரைப்படத்தை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்த திரைப்படம் மேலும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் லவ் டுடே திரைப்படம் காபி வித் காதல் திரைப்படத்தை மண்ணை கவ்வ வைத்திருக்கிறது.

Also read:காதலைக் கேவலப்படுத்தும் இந்த தலைமுறைக்கு செருப்படி கொடுத்த லவ் டுடே.. ட்விட்டர்ல இவங்க விமர்சனம்தான் ட்ரெண்டிங்

Trending News