சங்கமித்ரா தான் போச்சு.. ஈடாக சுந்தர் சி கையில் எடுத்த புது அஸ்திரம்

சுந்தர் சி தனது கனவு படமான சங்கமித்ரா என்னும் படத்தை எடுக்க பல காலமாக திட்டமிட்டு வருகிறார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் 250 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பதாக இருந்தது. மேலும் ஜெயம் ரவி, ஆர்யா, நயன்தாரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தனர்.

ஆனால் சில பைனான்சியல் பிரச்சினை காரணமாக படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதனால் இப்படத்தில் ஒப்பந்தமான நடிகர், நடிகைகள் தங்களது பட வேலைகளில் பிசியாக உள்ளனர். மேலும் சுருதிஹாசனும் இப்படத்திலிருந்து விலகிவிட்டார்.

இதனால் தற்போது சுந்தர்சி சங்கமித்ரா படத்தை சற்று தள்ளி வைத்து விட்டு தன்னுடைய படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளாராம். அதுவும் அந்தப்படத்தை 100 அல்லது 150 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். ஏனென்றால் இப்படத்தை மிக பிரமாண்டமாக எடுக்க உள்ளாராம்.

இந்த படத்திற்காக தமிழ்சினிமாவில் இரண்டு முக்கிய ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சுந்தர் சியின் படங்களில் பெரும்பாலும் காமடிக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் விமல் மற்றும் சிவாவை வைத்து அவர் இயக்கிய கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை தற்போது எடுக்க உள்ளார்.

கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா ஆகியோரை வைத்து சுந்தர்சி இயக்கியிருந்தார். இந்நிலையில் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பதில் சுந்தர் சி மும்முரம் காட்டி வருகிறார்.

ஆனால் இப்படத்திற்கு பெயரை மட்டும் மாற்றம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதாவது காபி வித் காதல் என்று வைக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். இந்தப்படமும் கண்டிப்பாக காமெடி ஜானரில் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.