திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரெடியான உள்ளத்தை அள்ளித்தா பார்ட்-2 கதை.. எதிர்பாராமல் சுந்தர்.சி எடுத்த முடிவு

இயக்குனர், நடிகர் என பரிமாணங்களைக் கொண்டவர் சுந்தர் சி. இவரது படங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவை ஜானரில் எடுக்கப்பட்டு வருகிறது. அரண்மனை போன்ற பேய் படங்கள் எடுத்தாலும் அதிலும் நகைச்சுவையை உள்ளடக்கியிருப்பார் சுந்தர் சி.

அந்த வகையில் கவுண்டமணியை வைத்த நிறைய படங்கள் எடுத்துள்ளார். அதில் கார்த்திக், கவுண்டமணி, ரம்பா ஆகியோர் நடிப்பில் 1996 இல் வெளியான படம் உள்ளத்தை அள்ளித்தா. முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை பெற்று தந்தது.

Also Read : என்னுடைய ஆணவத்திற்கு காரணம் ரஜினிதான்.. ஒரே போடாக போட்ட சுந்தர் சி

இந்நிலையில் இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போது மணிவண்ணன், கார்த்திக், கவுண்டமணி, சுந்தர் சி ஆகியோர் ஒன்றாக இருந்து பேசியபோது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று சுந்தர் சி கூறியுள்ளனர். இதைக் கேட்டவுடன் கார்த்திக் ஆர்வமாக இருந்தாராம்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தின் பார்ட் 2வில் ஓப்பனிங் சீனில் ரம்பாவின் போட்டோவுக்கு மாலை போட்டிருப்பது போன்று காட்சி அமைக்க நினைத்தாராம் சுந்தர் சி. அதாவது ஒரு கார் விபத்தில் ரம்பா இறந்து விடுவது போலவும் அதை தாங்க முடியாமல் கார்த்திக் அமெரிக்கா செல்வது போலவும் காட்சி அமைக்கப்படுகிறது.

Also Read : 16 வருடமாக காக்க வைத்த சுந்தர் சி.. சைலண்டா பார்த்த வேலை

மேலும் ஜெயிலில் இருந்து வெளியே வரும் மணிவண்ணன் ஒரு கலை கூத்தாடும் பெண்ணாக ரம்பாவை பார்க்கிறார். இந்த கதையைக் கேட்டவுடன் எல்லோருக்குமே பிடித்து விட்டது. ஆனால் தற்போது சூப்பர் ஹிட் படமாக ஓடிக் கொண்டிருக்கும் உள்ளத்தை அள்ளித்தா படத்தை பார்ட் 2 மூலம் சொதப்பி விடக்கூடாது என இந்த முயற்சியை சுந்தர் சி கைவிட்டு விட்டாராம்.

இதுவரை யாரிடமும் சொல்லாத இந்த கதையை சமீபத்திய பேட்டி ஒன்றில் சுந்தர் சி பகிர்ந்து கொண்டார். மேலும் இப்போது பார்ட் 2 எடுத்தாலும் கார்த்திக், ரம்பா, மணிவண்ணன், கவுண்டமணி போன்றோர் இடத்தை எந்த நடிகராலும் நிரப்ப முடியாது என சுந்தர் சி பேசி இருந்தார்.

Also Read : வயிறு குலுங்க சிரிக்க வைத்து வெற்றிகண்ட 6 படங்கள்.. வசூல் வேட்டையாடிய சுந்தர் சி

Trending News