2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியாகிறது. ரஜினியின் லால் சலாம், விஷாலின் ரத்னம் என பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆன நிலையில் ஒரு தரமான ஹிட் படம் கூட இந்த ஆண்டில் தமிழ் சினிமா கொடுக்கவில்லை. மாறாக மலையாள சினிமாவில் வெளியாகும் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருந்தது.
மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, ஆடுஜீவிதம், பிரம்மயுகம் என எதிர்பார்க்காத விதமாக மலையாள சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இப்போது சுந்தர்சி கோலிவுட்டை மீட்டு எடுத்து இருக்கிறார்.
தியேட்டரில் பட்டையை கிளப்பும் அரண்மனை 4
அதாவது மே 3ஆம் தேதி ஆன இன்று சுந்தர் சியின் இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடிப்பில் அரண்மனை 4 படம் வெளியாகி இருக்கிறது. அதிகபட்ச ஹாரர், அங்கங்கே காமெடி என சுந்தர் சி இந்த படத்தில் பட்டையை கிளப்பி உள்ளார்.
இந்நிலையில் அரண்மனை 4 படத்திற்கு போட்டியாக மலையாளத்தில் டொவினோ தாமஸின் நடிகர் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் இப்போது நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆகையால் அரண்மனை 4 படத்தில் தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் அரண்மனை படம் முதல் நாளே கிட்டத்தட்ட 3 கோடியை தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இப்போது அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் டபுள் மடங்காகும் என்பதில் சந்தேகம் இல்லை.