திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இறப்பதற்கு முன் நடிகையின் மீது உச்சகட்ட லவ்வில் இருந்த சுந்தர் சி.. குஷ்பூவால் சொல்ல முடியாமல் போன காதல்

வெள்ளித்திரையில் ஒரு காலகட்டத்தில் இயக்குனர், தயாரிப்பாளர்களின் விருப்பமான நடிகையாக இருந்தவர் குஷ்பூ. அவர் படத்தில் கதாநாயகியாக நடித்தால் கண்டிப்பாக 80 சதவீத வெற்றி என்பது உறுதியாகி இருந்தது. அந்தச் சமயத்தில் தான் பிரபுவுடன் குஷ்பூ ஜோடி போட்டு நடித்தார்.

இவர்களது காம்பினேஷன் ரசிகர்களுக்கு பிடித்ததால் அடுத்தடுத்த படங்களில் இதே கூட்டணி அமைந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் குஷ்பூவும், பிரபுவும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. பிரபுவின் தந்தை சிவாஜி இவர்களது திருமணத்திற்கு ஒற்றுக் கொள்ளவில்லை எனக் கூறப்பட்டது.

Also Read : 8 வயதில் இருந்து தந்தையால் சித்திரவதை அனுபவித்த குஷ்பூ.. பப்ளிசிட்டிக்காக பேசுவதாக வம்பு இழுத்த பிரபலம்

குஷ்பூ முறை மாமன் படத்தில் நடித்த போது இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது முதலில் சுந்தர் சி தான் குஷ்புவிடம் காதலை கூறியுள்ளார். உடனே குஷ்பூவும் ஓகே சொன்னதால் இவர்களது திருமணம் நடைபெற்றது. அதன்பின்பு இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி குஷ்பூவால் என்னுடைய காதல் சொல்ல முடியாமல் போனதாக கூறியுள்ளார். அதாவது சுந்தர்-சிக்கு தமிழ் சினிமாவில் இரண்டு நடிகைகள் மீது க்ரஷ் இருந்ததாம். அதில் ஒருவர் தான் குஷ்பூ, மற்றொருவர் நடிகை சௌந்தர்யா. சுந்தர் சி யின் அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருப்பார்.

Also Read : குஷ்பூவுக்காக மாற்றப்பட்ட கதை, வம்படியாக உள்ளே வந்த மீனா.. நாட்டாமை படத்தின் சுவாரஸ்யத்தை பகிர்ந்த இயக்குனர்

இந்நிலையில் தன்னுடைய முதல் சாய்ஸ் ஆன குஷ்புவிடம் காதலை சொல்லபோது உடனே சம்மதித்து விட்டார். ஒருவேளை குஷ்பூ நிராகரித்து இருந்தால் கண்டிப்பாக சௌந்தர்யாவிடம் தனது காதலை சொல்லி இருப்பேன் என சுந்தர் சி கூறியிருந்தார். சௌந்தர்யா சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே விமான விபத்தில் உயிரிழந்தார்.

கடைசி வரை சுந்தர் சி தன் மீது இவ்வளவு காதல் வைத்திருக்கிறார் என்பது தெரியாமலே அவர் சென்றுவிட்டார். மேலும் சௌந்தர்யாவை பற்றி பல பிரபலங்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். சிறந்த நடிகையான அவர் இன்னும் சில காலங்கள் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் அற்புதமான பல கதாபாத்திரங்களை கொடுத்திருப்பார்.

Also Read : மனவளர்ச்சி குன்றியதாக நடித்த 5 நடிகைகள்.. கல்யாண கலாட்டா செய்த குஷ்பூ

Trending News