செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சுந்தர் சி-யின் பட வசூலுக்கு ஆப்படித்த இளம் இயக்குனர்.. கவனிக்கப்படாமல் போன காபி வித் காதல்

சுந்தர் சி-யின் இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் காபி வித் காதல். முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்துடன் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படமும் மோதி இருக்கிறது.

அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் இந்த இரண்டு திரைப்படங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் லவ் டுடே திரைப்படம் முன்னிலையில் இருக்கிறது. இன்றைய கால காதலை வெளிப்படையாக காட்டியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது.

Also read : சுந்தர் சி-யின் கலகலப்பான காமெடியுடன் வெளியான காபி வித் காதல்.. சுடச்சுட வந்தா ட்விட்டர் விமர்சனம்

இதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு தற்போது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் சுந்தர் சி யின் காபி வித் காதல் திரைப்படம் தற்போது ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போயிருக்கிறது. ட்விட்டர் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் கூட லவ் டுடே திரைப்படத்தை பற்றி தான் பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

அந்த வகையில் காபி வித் காதல் திரைப்படம் ரசிகர்களை கவராமல் போனதற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது இந்த திரைப்படத்தில் அளவுக்கு அதிகமான கிளாமர் காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. எப்போதுமே குடும்பத்துடன் ஒன்றாக பார்க்கும் வகையில் படத்தை எடுக்கும் சுந்தர் சி எதற்காக இந்த ரூட்டுக்கு மாறினார் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

Also read : காதலைக் கேவலப்படுத்தும் இந்த தலைமுறைக்கு செருப்படி கொடுத்த லவ் டுடே.. ட்விட்டர்ல இவங்க விமர்சனம்தான் ட்ரெண்டிங்

ஒருவேளை இன்றைய கால இளைஞர்களை கவர வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அதுதான் அவருக்கு இப்போது சறுக்களை கொடுத்திருக்கிறது. ஏனென்றால் இந்த படத்தை விட லவ் டுடே திரைப்படம் மிகவும் எதார்த்தமாக இருப்பது ரசிகர்களை இன்னும் கவர்ந்துள்ளது.

அதனால் மிகப்பெரிய இயக்குனராக இருந்தும் கூட சுந்தர் சி இந்தப் படத்தால் பலத்த அடி வாங்கி இருக்கிறார். தற்போது பெருகி வரும் ஆதரவால் லவ் டுடே திரைப்படம் வசூலிலும் முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் இதன் மூலம் சுந்தர் சிக்கு ஆப்பு வைத்து விட்டார்.

Also read : 4 வருடமா கிடப்பில் போட்ட மெகா பட்ஜெட் படம், தூசி தட்டிய சுந்தர் சி.. மணிரத்னம் பற்ற வைத்த நெருப்பு

Trending News