வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுந்தர் சி இயக்கிய 35 படங்களில் நடித்த ஒரே நடிகர்.. 2 படங்களை மட்டும் மிஸ் செய்த காரணம் இதுதான்

28 வருடங்களாக சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கிய நடிகர் ஒருவர் இதுவரை சுந்தர் சி இயக்கிய 37 படங்களில் 35 படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களில் மட்டுமே அவரால் நடிக்க முடியாமல் போனது. அதற்கு என்ன காரணம் என்பது தற்போது வெளியாகி உள்ளது.

சுந்தர் சியின் நண்பர் மற்றும் நடிகருமான விச்சு விஸ்வநாத் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் துணை வேடம் என எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறார். இவர் ஒருசில கேரக்டர்களி மட்டுமே நடிப்பேன் என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்காமல் காமெடி, வில்லன், சித்தப்பா பெரியப்பா என்று எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை கச்சிதமாக பொருந்தி நடித்து அசத்துவார்.

Also Read: என்னுடைய ஆணவத்திற்கு காரணம் ரஜினிதான்.. ஒரே போடாக போட்ட சுந்தர் சி

இவர் சுந்தர் சி-யின் பெரும்பாலான படங்களில் இடம்பெற்றாலும், அவர் இயக்கிய இரண்டு படங்களில் மட்டும்தான் நடிக்கவில்லை. 1999 ஆம் ஆண்டு அஜித், மாளவிகா, சுவாதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘உன்னைத்தேடி’ என்ற படத்திலும், அதைத்தொடர்ந்து 2000 ஆண்டில் சத்யராஜ், குஷ்பு, லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளியான ‘உன்னை கண் தேடுதே’ போன்ற சுந்தர்சியின் இயக்கத்தில் வெளியான இந்த 2 படங்களில் மட்டும் தான் விச்சு விசுவநாதன் இடம்பெறவில்லை.

இதற்கு என்ன காரணம் என்றால் அந்த சமயத்தில் அவருடைய அப்பா இறந்ததால், அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லையாம். அந்த இரண்டு படங்களில் மட்டும் விச்சு விஸ்வநாத் நடித்திருந்தால், சுந்தர் சி இயக்கிய எல்லா படங்களிலும் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.

Also Read: 16 வருடமாக காக்க வைத்த சுந்தர் சி.. சைலண்டா பார்த்த வேலை

முதல் முதலாக சந்தனக் காற்றே படத்தின் மூலம் 1990 ஆம் ஆண்டு சரத்குமார் மற்றும் விஜய் கிருஷ்ணராஜ் ஆகியோருக்கு வில்லனாக நடித்த பிறகுதான் அந்தப் படத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சுந்தர் சியுடன் நட்பு ஏற்பட்டது.

அதன் பிறகு சுந்தர் சி முதல் முதலாக இயக்கிய நகைச்சுவை திரைப்படமான ‘முறைமாமன்’  படத்தில் இருந்தே, விச்சு விஸ்வநாதன் அவருடைய எல்லாப் படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் எனக்கு வாய்ப்புக் மட்டுமல்ல வாழ்க்கையையே கொடுத்தவர் சுந்தர் சி என்று விச்சு விஸ்வநாத் சமீபத்திய பேட்டியில் உணர்ச்சிபூர்வமாக பேசியிருக்கிறார்.

Also Read: ஒரு படம் பண்ணிட்டா நீ பெரிய ஆளா.. வெளுத்து வாங்கும் சுந்தர் சி

Trending News