வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சுந்தரா டிராவல்ஸ் 2.. முரளி, வடிவேலுக்கு பதிலாக யார் நடிக்கிறாங்க பாருங்க? கொடுமை!

என்னதான் மாஸ் படங்கள் பார்த்தாலும் முழுக்க முழுக்க ஒரு நல்ல காமெடி திரைப்படம் பார்க்கும் திருப்தி வேறு எதிலுமே வராது. அதற்கு உதாரணமாக அமைந்த திரைப்படம்தான் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ்.

கடந்த 2002ஆம் ஆண்டு தாகா என்பவரின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் சுமாரான வெற்றியையே பெற்றது. ஆனால் தொலைக்காட்சியில் சுந்தரா டிராவல்ஸ் படம் போடும் போதெல்லாம் நல்ல டிஆர்பி கிடைத்து வருகிறது.

நல்ல தரமான காமெடி படம் என்பதற்கு உதாரணமாக அமைந்தது சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம். இந்த படத்தில் முரளியின் எதார்த்தமும் வடிவேலுவின் அட்டகாசமான காமெடியும் படத்திற்கு பெரும் தூணாக அமைந்தது. அதிலும் வினு சக்ரவர்த்தி வரும் காட்சியெல்லாம் அல்டிமேட் ஆக இருக்கும்.

இந்த படத்தை வெறுப்பவர்கள் இல்லை என்று தைரியமாக சொல்லலாம். அந்த அளவுக்கு திருப்தி தரும் படமாக அமைந்தது. இந்நிலையில் சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதில் முரளிக்கு பதிலாக கருணாகரன் என்ற காமெடி நடிகரும், வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபுவும் நடிக்க உள்ளார்களாம். அப்படி ஒன்று மட்டும் நடந்துவிட்டால் தமிழ்சினிமா அவ்வளவுதான் என்கிற அளவுக்கு ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நல்ல ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கைவிடுமாறு நெட்டிசன்கள் தொடர்ந்து படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

sundara-travels-2-cinemapettai
sundara-travels-2-cinemapettai

Trending News