வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சுந்தரி சீரியல் நடிகைக்கு திடீரென்று நடந்த கல்யாணம்.. அணுவைத் தேடி கல்யாணத்துக்கு போன கார்த்திக்

Sundari Serial Actress: சன் டிவியில் கிட்டத்தட்ட 1000 எபிசோடு தாண்டி கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கி சுந்தரி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் இந்த சீரியலுக்கு ஒரு முடிவே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப கார்த்திக் தொடர்ந்து சுந்தரியை வெற்றி கல்யாணம் பண்ணாதபடி பல சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார். இருந்தாலும் கார்த்திக்கு இவ்வளவு நெகட்டிவ் ஆக நடிப்பை கொடுத்த போதிலும் கார்த்திக்கின் நடிப்பை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் எப்படியாவது கார்த்திக்கு அணுவை மறுபடியும் கொண்டு வந்து இருவரையும் சேர்த்து வைத்து விடுங்கள். அதன் பிறகு சுந்தரி மற்றும் வெற்றிக்கு கல்யாணத்தை பண்ணி வைத்து நாடகத்தை முடித்து விடுங்கள் என்று மக்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். ஏனென்றால் கார்த்திக் அந்த அளவிற்கு அணுவை காதலித்து அணுவுக்காக வாழ்க்கையை தொலைத்து வருகிறார்.

sundari anu
sundari anu

இப்படி இருக்கும் பொழுது கார்த்திக், அணுவைத் தேடி நேற்று நடந்த ஒரு கல்யாணத்திற்கு போயிருக்கிறார். அதாவது சுந்தரி சீரியலில் இன்னொரு கதாநாயகியாக நடித்த ஸ்ரீ கோபிகா என்கிற அனுவுக்கு நேற்று திடீரென்று கல்யாணம் நடந்து முடிந்து விட்டது. கேரள மாநிலம் பாலக்காடு சேர்ந்த நடிகை ஸ்ரீ கோபிகா, ஓவியா நடிப்பில் வெளியான 90 எம் எல் மற்றும் வுல்ஃப் என்கிற படத்திலும் நடித்தார்.

sundari serial actress anu
sundari serial actress anu

ஆனால் இந்த இரண்டு படங்களுமே தோல்வியானதால் வெள்ளிதிரையில் இருந்து சின்னத்திரைக்கு சுந்தரி சீரியல் மூலம் அறிமுகமானார். இதில் இவருடைய அணு கதாபாத்திரத்தை மறக்க முடியாத அளவிற்கு நடிப்பை பிரமாதமாக கொடுத்தார். அதே மாதிரி அன்பே வா சீரியலிலும் இரண்டாவது நாயகியாக நடித்து வந்தார். இதன் பிறகு மலையாளத்தில் சுந்தரி சீரியல் ஹீரோவாக நடித்த ஜிஷு மோகன் என்கிற கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

sundari serial (1)
sundari serial (1)

இந்நிலையில் ஸ்ரீ கோபிகாவுக்கு வருண் தேவ் என்பவருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த வகையில் நேற்று மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்து விட்டது. இவருடைய திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அத்துடன் சுந்தரி சீரியலில் ஹீரோவாக நடித்தவரும் கார்த்திக் அந்த கல்யாணத்திற்கு போய் தோழி ஸ்ரீ கோபிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். தற்போது இவருடைய கல்யாண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News