ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சுந்தர்.சியை கடைசி நேரத்தில் காப்பாற்றிய 5 படங்கள்.. இந்த ஹிட் இல்லனா ரொம்ப கஷ்டம்

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனராக பரிச்சயமான சுந்தர் சி முதன்முதலாக தலைநகரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன் பிறகு வீராப்பு, சண்டை உள்ளிட்ட வெற்றிப் படங்களை வரிசையாக அவருடைய நடிப்பில் வெளியானது. முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம், கமலஹாசன் நடித்த அன்பே சிவம் படங்களை இயக்கி ரசிகர்களுக்கு பரிசளித்தார். அது இல்லாமல் பல தோல்விகள் தொடர்ந்து வந்தாலும் சமீபத்தில் ஹிட் கொடுத்து அவரை காப்பாற்றிய படங்களை பார்க்கலாம்.

அன்பே சிவம்: உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் மாதவன், கிரண் உள்ளிட்டோர் நடித்த இந்தப்படத்தில் காதல் காட்சிகளும், அதேசமயம் அதிரடி காட்சிகளையும் ஒரே கோர்வையாக தந்து கமலஹாசனை இரு வேறு கோணத்தில் சுந்தர்சி காண்பித்தது படத்தின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்பட்டது. படம் அட்டர் பிளாப் ஆனால் தற்போதும் பேசப்படும் படம்.

கலகலப்பு: இந்தப் படம் முழுக்க முழுக்க கலகலப்பான சிரிப்பு திரைப்படமாக ரசிகர்களுக்கு நகைச்சுவை உணர்வை அள்ளிக்கொடுத்த திரைப்படமாக அமைந்தது. முதல் பாகம் செம ஹிட் ஆன இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

ஆம்பள: விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் சுந்தர் சி தன்னுடைய இயக்கத்தில் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு நகைச்சுவைத் திரைப்படத்தை ரசிகர்களுக்கு தந்தார். அத்துடன் சுந்தர் சி இயக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்து அடிப்பதன் மூலம் அவரது தனித்துவத்தை வெளிக்காட்டி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெறுவார்.

வின்னர்: வடிவேலின் கலாட்டா காமெடி பிரசாந்தின் அதிரடி காட்சிகளுடன், காதல் சேசிங் உள்ளிட்ட மசாலா திரைப்படத்தை சுந்தர் சி ரசிகர்களுக்கு தந்தவர். இந்தப்படத்தில் வடிவேலு பேசிய ஒவ்வொரு டயலாக்கும் இன்றுவரை ரசிகர்களிடம் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

அரண்மனை: மூன்று பாகங்களாக ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமான அரண்மனை திரைப்படத்தை அவரே கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ளார். பேய் படத்திற்கு உதாரணமாக காண்பிக்கப்படும் அரண்மனை படம் ரசிகர்களுக்கு பயத்துடன் நகைச்சுவையையும் அள்ளித்தந்த திரைப்படமாக ரசிகர்களிடையே புகழப்பட்ட கொண்டிருக்கிறது.

Trending News